பல நடிகர்களுக்கு ஹாலிவுட் படம் நடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கும். தற்போது ஹாலிவுட்டில் The Extraordinary Journey Of The Fakir என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட்ட நிலையில், சில புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

அதிகம் படித்தவை:  நயன்தாரா, தமன்னாவை தொடர்ந்து ஸ்ரீதிவ்யா

இந்நிலையில் இப்படத்தின் கதை என்ன என்பது வெளியாகியுள்ளது. இந்தியாவிலிருக்கும் அஜா, ஏழ்மையான மாயாஜால வித்தைக்காரன். அவனது அம்மா அவனை ஒரு மர்மமான நோக்கத்துக்காக பாரிஸ் நகரத்தில் இருக்கும் ஈஃபில் டவருக்கு அனுப்புகிறார்.

ஒரு டாக்ஸி ஓட்டுநருடன் ஏற்படும் தகராறால் அஜா, பாரிஸின் மிகப்பெரிய மரச்சாமான் கடையில் உள்ள ஒரு அலமாரிக்குள் எதிர்பாராதவிதமாக மாட்டிக்கொள்ள அந்த அலமாரி விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு ஐரோப்பாவை சுற்றி வருகிறது. இந்த பயணத்தில் பல விதமான மனிதர்களை சந்திக்கும் அஜா, மாயாஜால உதவியோடு மீண்டும் பாரிஸ் வருகிறானா என்பது தான் கதையாம்.