பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக பாரபட்சமாகவும், ஒருசிலர் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் இந்த குற்றச்சாட்டு மிக அதிகமாகியது.kamalhaasan habbit

இந்த நிலையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தார்கள் அனைவருக்கும் இந்த சந்தேகம் நிவர்த்தி ஆகியிருக்கும். இதுவரை மொத்தமாக அனைவரையும் உட்கார வைத்து கேள்வி கேட்டு வந்த கமல், நேற்று ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து வாழைபழத்தில் ஊசி ஏற்றுவது போல் கேள்விகளை தொடுத்தார்.Kamal Hassan_cinemapettai

அதிகம் படித்தவை:  எனக்கு அப்போது தைரியம் இல்லை! கமலின் ஓபன் டாக்

காயத்ரி, சக்தி, ஜூலி ஆகியோர் கமல்ஹாசனின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறினர். குறிப்பாக ஆரவ் அளித்த முத்தம் குறித்து கமல் விளக்குகையில் ‘மருத்துவ முத்தம்’ என்றும் எனக்கே தெரியாத முத்தவகை இது என்றும் கூறியது ஆரவ்வை தலைகுனிய செய்தது.அதேபோல் விஜய் டிவியையும் அவர் தவறை தைரியமாக சுட்டி காட்ட தவறவில்லை. ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பும்போது சமூக அக்கறை வேண்டும் என்றும் எடிட் செய்வதில் இன்னும் கவனம் தேவை என்றும் தகாத சொல் அடங்கிய காட்சிகள் ஒளிபரப்புக்கு வருவதை தடுக்க வேண்டும் அவர் குறிப்பிட்டார்.

அதிகம் படித்தவை:  பாகுபலி மீது வைத்த நம்பிக்கை என் மீது இல்லை - கமல்ஹாசன் வேதனை

இதுவரை கமல்ஹாசனை விமர்சித்து வந்தவர்கள் கூட நேற்றைய நிகழ்ச்சியை பார்த்தபின் கமல்ஹாசனின் தைரியமான செயலை பாராட்டினர். மொத்தத்தில் ஓவியா இல்லாமல் வெறுமையாக இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தனது கண்டிப்பால் களைகட்டிவிட்டார் கமல் என்றுதான் கூற வேண்டும்.