சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பாண்டியன் கொடுக்கும் டார்ச்சரால் தனிக்குடித்தனம் போக நினைக்கும் மகன்.. கதிரை காப்பாற்ற எதிர்த்து பேசிய ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா, செந்திலை போன் பண்ணி கூப்பிட்டதும் பாண்டியன் கடை வேலையை பார்க்காமல் ஏன் போன் பேசிக் கொண்டே இருக்கிறாய் என்று திட்டுகிறார். உடனே ஃபோனை கட் பண்ணிவிட்டு மீனா ஆபீஸ்க்கு போய் விடுகிறார். இதனால் மனசு கேட்காமல் செந்தில், மீனா ஆபீஸ் முடித்துவிட்டு வரும்பொழுது திருப்பி கூப்பிட போக வேண்டும் என்று நினைத்து டெலிவரி பொருட்களை எடுத்துட்டு பாண்டியனிடம் பொய் சொல்லி கிளம்பி விடுகிறார்.

மீனா ஆபீஸ் போயிட்டு வரும் வழியில் செந்தில் காத்திருந்து மீனாவை கூப்பிடுகிறார். அந்த நேரத்தில் கடையிலிருந்து பழனிச்சாமி போன் பண்ணி ஆர்டரை டெலிவரி பண்ணிட்டியா என்று செந்திலிடம் கேட்கிறார். அப்பொழுது மீனா, பாண்டியனை நக்கல் அடிக்கும் விதமாக வேற குரலில் பேசி கலாய்த்து விடுகிறார். இதை பார்த்த செந்தில் கல்யாணத்துக்கு பின் கொஞ்சம் கூட சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்று பீல் பண்ணி பேசுகிறார்.

இதற்காகவாவது கவர்மெண்ட் எக்ஸாம் பாஸ் பண்ணி வேற ஏதாவது ஒரு ஊருக்கு போயிரணும் என்று மீனாவிடம் சொல்கிறார். உடனே மீனாவும் அதெல்லாம் பாத்துக்கலாம் இப்ப வீட்டுக்கு போகலாம் என்று சொல்லி கிளம்பி விடுகிறார்கள். ஆக மொத்தத்தில் செந்தில் பொருத்தவரை பாண்டியன் கொடுக்கும் டார்ச்சரால் கொஞ்சம் தூரமாக போய் இருக்கலாம் என்று ஆசை வந்துவிட்டது. அந்த வகையில் எப்படியாவது எக்ஸாமில் பாஸ் பண்ணி வெளியூருக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கி போக வேண்டும் என்று நினைக்கிறார்.

அடுத்ததாக பாண்டியன் வீட்டிற்கு வந்ததும் தங்கமயில் அப்பா அம்மா குலதெய்வம் கோயிலுக்கு கூப்பிட்டதை வைத்து குடும்பத்துடன் போகலாம் என்று முடிவெடுத்து பேசுகிறார்கள். அப்பொழுது எந்த கோயில் எந்த நேரம் என்று சரவணன் விட்டு போன் பண்ணி கேட்க சொல்கிறார். இதற்கு மாற்று கருத்தாக கதிர் அவருடைய கருத்தை சொல்லும் பொழுது பாண்டியன் கதிரை திட்டி விடுகிறார்.

உடனே கதிருக்கு சப்போர்ட்டாக பேசும் விதமாக ராஜி, மறைமுகமாக மாமனாரை எதிர்த்து பேச ஆரம்பிக்கிறார். ஆனால் இப்படியே போனால் பெரிய சண்டை ஆரம்பித்து விடும் என்பதால் கோமதி உள்ளே புகுந்து பிரச்சனையை முடித்து விடுகிறார். பிறகு அனைவரும் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது மீனாவுக்கு புடவை கட்டுவதற்கு உதவும் வகையில் செந்தில் உதவி செய்கிறார்.

அடுத்ததாக தங்கமயிலும் புடவை கட்டிவிட்டு அதை சரி பண்ணுவதற்காக சரவணன் இடம் உதவி கேட்கிறார். உடனே சரவணன் அதெல்லாம் சரியாகத்தான் இருக்கு என்று சொல்லி அலட்சியப்படுத்தி விடுகிறார். என்ன தான் தங்கமயில் பொய் பித்தலாட்டம் பண்ணி மருமகளாக வந்தாலும் ஒரு மனைவியாக கிடைக்க வேண்டிய சின்ன சின்ன சந்தோசங்களும் கிடைக்காமல் அல்லல் பட்டு வருகிறார்.

- Advertisement -

Trending News