Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

நிச்சயதார்த்தத்தை வியாபாரமாக மாற்றிய எஸ்கேஆர் குடும்பம்.. முதலாளியிடம் பம்மும் குணசேகரன்

இவ்வளவு நாட்களாக எஸ்கேஆர் குடும்பம் டீசண்டான, மற்றவர்கள் சொத்துக்கு ஆசைப்படாத ஒரு குடும்பம் என்று இருந்தார்கள்.

விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல் தான் என்று நினைத்திருக்கும் போது தற்போது வரும் எபிசோடுகளை பார்க்கும் பொழுது கொஞ்சம் போரடிக்க வைக்கிறது. அந்த வகையில் ஆதிரையின் நிச்சயதார்த்தத்திற்கு குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இருக்கிறார்கள். இவ்வளவு நாட்களாக எஸ்கேஆர் குடும்பம் டீசண்டான, மற்றவர்கள் சொத்துக்கு ஆசைப்படாத ஒரு குடும்பம் என்று இருந்தார்கள்.

தற்போது எஸ்கேஆர் இன் தம்பி, நிச்சயதார்த்தம் செய்வதற்கு முன்னதாக சொத்து வேண்டும் என்று டிமான்ட் செய்திருந்தார். இது சரியான முறையா என்று கேட்ட அப்பத்தாவிடம் இதுதான் குணசேகரனுக்கு நாங்கள் கொடுக்கும் பதிலடி என்று சாமர்த்தியமாக அரசு பேசினார். ஒரு வழியாக எல்லா விஷயமும் சரி செய்துவிட்டு தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்று வருகிறது.

Also read: எஸ் கே ஆர் பொண்டாட்டினா வாயை பிளக்கும் குணசேகரன்.. மெண்டல் என லெப்ட் அண்ட் ரைட் வசை பாடிய எக்ஸ் லவ்வர்

இதனைத் தொடர்ந்து இரண்டு குடும்பமும் தாம்பூல தட்டு மாற்றும் நேரத்தில் அரசு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாத படி முதலில் அந்த கம்பெனியை எங்களுக்கு மாற்றி அமைத்து கதிர் கையெழுத்து போட்டுக் கொடுக்கட்டும் அதன் பின் இந்த மாதிரி வேலைகளை நாம் செய்து கொள்ளலாம் என்று வம்படியாக சொல்லிவிட்டார்.

இவர் என்னதான் குணசேகரனை பழிவாங்க வேண்டும் என்று நினைத்து இருந்தாலும் நிச்சயதார்த்தத்தை வியாபாரமாக ஆக்கி கல்யாணம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் இந்த திட்டம் மிக மோசமான ஒன்றாக இருக்கிறது. இவர் செய்யும் அனைத்துக்கும் துணை போகும் விதமாக சாருபாலா மற்றும் எஸ்கேஆர் அமைதியாக இருப்பது அவர்களிடம் இருக்கும் நேர்மையை குறைக்கிறது.

Also read: குணசேகரனை நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட நந்தினி.. பதிலடி கொடுத்த ஜனனி

சரி இவங்க தான் இப்படி இருக்காங்கண்ணா இது தெரிஞ்ச ஜனனி ஆரம்பத்திலேயே தட்டி கேட்காமல் வாயை மூடி அமைதியாக இருந்தது எந்த விதத்தில் சரியாக இருக்கும். இப்பொழுது மட்டும் வந்து கொஞ்சம் ஓவர் ரியாக்ஷன் கொடுக்கிறார். அடுத்ததாக குணசேகரன் இதைக் கேட்டு கோபப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மிகவும் இயல்பான கேரக்டரில் முதலாளிடம் பம்பிபோய் என் மேல நம்பிக்கை இல்லையா உங்களுக்கு என்று கேட்கிறார்.

ஆனாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எஸ்கேஆர் தம்பி அவருடைய விஷயத்துல கண்ணாக இருக்கிறார். கம்பெனி சொத்தை வாங்குவதற்காக பத்திரத்தை ரெடியாக வைத்துக் கொண்டே எழுந்து, கையெழுத்து கதிர் போடட்டும் அதன் பிறகு எல்லா விஷயமும் நடக்கும் என்று தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வம்படியாக அலம்பல் செய்து கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் போது சீக்கிரமாக இந்த திருமணத்தை செய்து விட்டு அடுத்த கதைக்கு இயக்குனர் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: எஸ் கே ஆரின் தம்பி மூலம் காய் நகர்த்தும் அப்பத்தா.. குணசேகரனை பழிவாங்க நினைக்கும் அரசு

Continue Reading
To Top