ஊரடங்குக்கு பின்னும் முடங்கும் தமிழ் சினிமா.. விழி பிதுங்கி நிற்கும் தயாரிப்பாளர்கள்!

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருப்பதால், திரைப்படங்கள் வெளியாவதில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் தயாரிப்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஏனென்றால் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை நாட்களை குறிவைத்து பல முன்னணி நடிகர்களின் படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 20-ஆம் தேதி முதலே படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். அதில்

  • மார்ச் 26ஆம் தேதி – சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’.
  • ஏப்ரல் 2ஆம் தேதி – கார்த்திக் நடிக்கும் ‘சுல்தான்’.
  • ஏப்ரல் 9ஆம் தேதி – தனுஷின் ‘கர்ணன்’.
  • ஏப்ரல் 14ஆம் தேதி – விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’.

ஆகிய படங்களை அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஏற்கனவே வெளியானது.

இருப்பினும் தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு பல கட்சிகளின் அரசியல் கூட்டம் நடைபெறுவதால், திரையரங்குகளில் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து விடுமோ? என்ற அச்சம் திரையரங்க உரிமையாளர்கள் இடையே எழத் தொடங்கி விட்டது.

ஏனென்றால் கொரோனா பாதிப்புக்கு பிறகு, தங்கள் தொழிலை மீட்டெடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், கோடை விடுமுறைக்காக காத்திருக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தற்போது திட்டமிட்டபடி படங்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கலக்கமடைந்துள்ளனர்.

2021-released-movie-cinemapettai

அதுமட்டுமில்லாமல் தேர்தல் நடைபெறும் போது, ஒவ்வொரு முறையும் திரைப்படங்கள் வெளியீடு தேதி மாற்றப்படுவது இயல்புதான்.

ஆனால் ஏற்கனவே திட்டமிட்டபடி படங்கள் வெளியாகி வெற்றி அடைந்தால் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என்பதால் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தற்போது விழிபிதுங்கி நிற்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்