Vairamuthu : கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாடலாசிரியர் வைரமுத்து மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பின்னணி பாடகி சின்மயி வைத்திருந்தார். அதாவது தன்னை தவறாக வைரமுத்து அணுகியதாக பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்து இருந்தார்.
இந்த விஷயம் பூதாகரமாக வெடிக்க சிலர் சின்மயிக்கு ஆதரவாகவும், சிலர் வைரமுத்துக்கு ஆதரவாகவும் பேசினர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் ஹேமா கமிட்டியின் அறிக்கை மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருந்தது. மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் இன்னல்களை இதில் வெளிச்சம் போட்டு காண்பித்திருந்தனர்.
அங்கு உள்ள பெரிய நடிகர்கள் முதல் கேமராமேன் வரை பலர் மீது குற்றச்சாட்டுகளை வெளிப்படையாகவே ஊடகங்களில் நடிகைகள் பேசி இருந்தனர். இதை அடுத்து வைரமுத்து தமிழ் சினிமாவிலும் ஹேமா கமிட்டி போல் அறிக்கை வரவேண்டும் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
வைரமுத்து பற்றி பேசிய பாடகி
இப்போது சின்மயை தொடர்ந்து பாடகி சுசித்ராவும் வைரமுத்து பற்றி சில மோசமான சம்பவங்களை கூறியிருக்கிறார். அதாவது வைரமுத்து பொதுவாகவே பாடகிகளிடம் பேசும் போது உங்கள் குரலில் காதல் தெரிகிறது என்று கொஞ்சி வழிஞ்சு தான் பேசுவார்.
நான் ஒரு பாடல் பாடிய போது வீட்டிற்கு அழைத்திருந்தார். அப்போது பாட்டியுடன் சென்றதைப் பார்த்து அதிர்ச்சியாகிவிட்டார். நீங்கள் தனியாக வருவீர்கள் என்று நினைத்தேன் என்று வைரமுத்து கூறினார். நான் எப்போதும் பாட்டியோட தான் வருவேன் என்று சுசித்ரா கூறினாராம்.
மேலும் என்னை தொடறதுக்காக தான் வைரமுத்து அழைத்தார். சும்மா பரிசு கொடுக்கிறேன் என்ற அழைத்த நிலையில் பாட்டியுடன் வந்ததால் பேண்டின் ஷாம்பூ பாட்டில் இரண்டை பரிசாக வழங்கினார். அவ்வளவு மோசமானவர் வைரமுத்து என்று சுசித்ரா கூறியிருக்கிறார்.
சர்ச்சைக்கு பேர் போன சுசித்ரா, சின்மயை தொடர்ந்து வைரமுத்து மீது இவ்வாறு குற்றச்சாட்டு வைத்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மீண்டும் வெடிக்கும் வைரமுத்து சர்ச்சை
- ளையராஜாவை சீண்டி வைரமுத்து போட்ட பதிவு
- வைரமுத்து பற்றி பேசிய கங்கை அமரனுக்கு காட்டமான பதிலடி
- கொழுந்துவிட்டு எரியும் வைரமுத்து, இளையராஜா பிரச்சனை