சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

நாங்க யாரையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.. விஜய், அஜித்திடம் இருக்கும் ஒற்றுமை

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. அஜித் குமார் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் விஜய்யின் 48-வது பிறந்தநாள் ஜூன் 22ம் தேதி பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.

வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தை தொடர்ந்து தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. விஜய் பிறந்த நாள் பொழுது அவரது சூட்டிங் ஸ்பாட்டில் கலந்துகொண்டார். அப்போது சரத்குமார் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர்.

வாரிசு படத்தில் விஜய் குடும்பமாக நடிக்கும் அத்தனை பிரபலங்களும் ரசிகர்களும் இந்த பிறந்த நாளுக்கு வந்து விஜய்யுடன் கொண்டாடி அசத்தி விட்டனராம். அதுமட்டுமின்றி இந்த பிறந்த நாளில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் அனைத்தையும் ரகசியமாக வைத்திருக்கின்றனர்.

வாரிசு படம் வெளி வந்த பின்னர்தான் வெளியிடுவார்களாம். இந்த போட்டோக்களை இப்பொழுதே வெளியிட்டால் படத்தில் அனைவரது கெட்டப்பும் தெரிந்துவிடும். அதுமட்டுமின்றி போடப்பட்ட செட்டுகள் அனைத்தையும் எளிதாக வெளியில் கசிந்து விடும் என்று இந்த போட்டோக்களை ரகசியமாக பாதுகாத்து வருகின்றனர்.

ஆனால் விஜய் அவர்கள்,  பிறந்தநாளன்று அவரைப் பார்க்க ரசிகர்கள் வந்தால் உடனே ஒரு நிமிடம் காத்திருங்கள் என கூறிவிட்டு, கேரவனுக்குள் சென்று தன்னுடைய படத்திற்கான கெட்டப்பை முழுவதுமாக கலைத்துவிட்டு சாதாரணமாக வந்து நின்று ரசிகர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொள்வாராம் .

அதேபோல்தான் அஜித்தும் அவரது ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுக்க நினைத்தால் ஒரு நிமிடம் காத்திருங்கள் எனக்கூறிவிட்டு உடனே கேரவனுக்குள் சென்று முழுவதுமாக தன்னுடைய கெட்டப்பை கலைத்துவிட்டு ரசிகர்கள் சாதாரணமாக நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வார். இந்த விஷயத்தில் விஜய் அஜித் நிற்கும் ஒற்றுமையாக தான் உள்ளனர்.

- Advertisement -

Trending News