Tamil Cinema News | சினிமா செய்திகள்
முரட்டுத்தனமாக தொடங்கும் சீயான்60.. அப்பா, மகன் ரெண்டு பேருமே சிக்ஸ்பேக் வைக்கிறார்களாமே!
கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படம்தான் தற்காலிகப் பெயர் கொண்ட சியான்-60.
ஜூன் மாதம் வெளியிடப்பட்ட இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அடுத்து, ஒரு முனையில் பெரியவரின் கை மற்றொரு முறையில் குழந்தையின் கை நடுவில் துப்பாக்கி என்கின்ற திடுக்கிடும் போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் கார்த்திக் சுப்புராஜ்.
தற்போது இயக்குனர் இந்தப் படத்திற்கான ஷூட்டிங் ஸ்பார்ட்டாக எழில் கொஞ்சும் இடமான கொடைக்கானலை தேர்வு செய்துள்ளார். அங்கு ஷூட்டிங் நடைபெறுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
எனவே கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தில் விக்ரம் மற்றும் துருவ் ஆகிய இருவரும் அப்பா மகன் வேடத்தில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படம் கேங்ஸ்டர் படமாக இருக்க உள்ளதால் துருவ், விக்ரம் தங்களுடைய உடலை ஃபிட்டாக மாற்றியுள்ளனர். அவ்வபோது இவர்களின் வொர்க் அவுட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை மிரள வைக்கின்றன.
விக்ரம் மற்றும் அவரது மகன் இணைந்து நடிக்கும் இந்த படம் எவ்வாறு இருக்கும் என்ற ஆர்வத்துடன் அவருடைய ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.
மேலும் இந்த படத்தில் இருவரும் சிக்ஸ்பேக் வைத்து நடக்க உள்ளதால் படம் மிகவும் பரபரப்பான ஆக்ஷன் படமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
