வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

21 வயதில் திருமணம், கணவரை தாத்தாவானு கேட்பாங்க.. கோபத்தில் கொந்தளிக்கும் சீரியல் நடிகை

பொதுவாக சினிமா மற்றும் சீரியலில் உள்ள நடிகைகள் 30 வயதை தாண்டி தான் திருமணம் செய்து கொள்வார்கள். ஏனென்றால் திருமணம் செய்து கொண்டால் அடுத்தடுத்த பட வாய்ப்பு வருவது கடினம். அதுமட்டுமின்றி ஹீரோயின் வாய்ப்பு வராது, அக்கா, அண்ணி கதாபாத்திரத்தில் தான் நடிக்க வாய்ப்பு வரும்.

இதனால் தான் இப்போதும் நடிகைகள் தங்களது திருமணத்தை தள்ளிப்போட்டு வருகிறார்கள். ஆனால் சீரியல் நடிகை ஒருவர் அவருடைய விருப்பத்தினால் 21 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். மேலும் அவரது கணவர் இவரை விட பார்ப்பதற்கு சற்று முதியவர் போல் தோன்றுவதால் உங்களுடைய தாத்தாவா என ரசிகர்கள் கேட்பதுண்டு என்ற பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Also Read: குடும்பத்தை பற்றிய கேவலமான பதிவு.. கோபத்தில் நீலிமா செய்த தரமான சம்பவம்

அதாவது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை, சினிமாவில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு சீரியலில் இறங்கி பட்டையை கிளப்ப ஆரம்பித்தார். இதை தொடர்ந்து சன் டிவி, விஜய் டிவி, ஜெயா டிவி என அனைத்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

சிவாஜி, கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் நீலிமா ராணி. சில படங்களில் நடித்த இவர் மெட்டி ஒலி, கோலங்கள், ராஜா ராணி போன்ற பிரபல தொடர்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

Also Read: சிறு வயதில் தொலைந்துபோன நீலிமா ராணி.. அதிர்ச்சி சம்பவத்தை அசால்டாக சொல்றீங்களேமா!

அதாவது கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆகஸ்ட் 16 1947 படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நீலிமா ராணி இரண்டாவது முறையாக கருவுற்ற போது நடத்திய போட்டோ சூட் இணையத்தில் வைரலாக பரவியது. இதில் அவரது கணவர், முதல் குழந்தை ஆகியோர் புகைப்படத்தில் இடம் பெற்று இருந்தனர்.

இந்நிலையில் நீலிமா ராணி இடம் அவரது கணவரை உங்கள் தாத்தாவா என பலர் கேட்பார்கள் என்று அந்த பேட்டியில் கூறி இருந்தார். ஏனென்றால் அவருக்கு டை அடிப்பதில் விருப்பமில்லை. எனக்கும் அதில் உடன்பாடு இல்லை. என் குழந்தைகளுக்கு அவரது அப்பா சால்ட் அண்ட் பெப்பர் தான். தேவையில்லாமல் இதுபோல் விமர்சனம் செய்பவர்களை கமெண்டில் நான் திட்டி விடுவேன் என நீலிமா கொந்தளித்து பேசி இருந்தார்.

Also Read: தொப்புளை காட்டி சூட்டைக் கிளப்பிய நீலிமா ராணி.. அலண்டு போன இணையதளம்

- Advertisement -

Trending News