தலையில தூக்கி வச்சு ஆடும் போதே நினைச்சோம்.. பிரியா பவானி 40% சம்பள உயர்வுக்கு பின் இருக்கும் ரகசியம்

செய்தி வாசிப்பாளராக தனது பணியை துவங்கிய பிரியா பவானி சங்கர், அதன் பிறகு சின்னத்திரை சீரியல்களில் கதாநாயகியாக நடித்து தற்போது கோலிவுட் டாப் ஹீரோயின்களுக்கெல்லாம் கடும் போட்டியான நடிகையாக மாறி உள்ளார். தொடக்கத்தில் சின்ன சின்ன பிரபலங்களுடன் இணைந்து நடித்த பிரியா பவானி சங்கர் இப்போது தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம், சிம்புவின் பத்து தல, கமலஹாசனின் இந்தியன் 2, ராகவா லாரன்ஸின் ருத்ரன் போன்ற படங்களில் டாப் நடிகர்களுடன் இணைந்துள்ளார்.

அதிலும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீசாக இருக்கும் ருத்ரன் படத்தின் பட ப்ரோமோஷன் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இதில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கரை தலையில் தூக்கி வைத்து பேசினார். முதல் முதலாக தமிழ் நடிகையுடன் இணைந்து நடிப்பது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.

Also Read: சைலன்டா சம்பளத்தை உயர்த்திய லாரன்ஸ்.. ருத்ரன் படத்திற்கு இவ்வளவு சம்பளமா?

இவருடன் அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடிக்க வேண்டும் என்று விருப்பமும் தெரிவித்தார். இப்படி மேடையில் பிரியா பவானி சங்கரை புகழ்ந்து தள்ளியதால், அங்கு இருப்பவர்களுக்கு கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தது. எதற்காக ராகவா லாரன்ஸ் இப்படி பிரியா பவானி சங்கரை தூக்கி வைத்து பேசுகிறார்.

ஒருவேளை இருவருக்கும் பத்திக்கிச்சோ என்றெல்லாம் நினைத்தனர். அதற்கேற்றார் போல் ருத்ரன் படத்திற்கு பிரியா பவானி சங்கர் ஒரு கோடிக்கு மேல் சம்பளமாக பெற்றிருக்கிறார். அதேசமயம் பிரியா பவானி சங்கர், பத்து தல படத்துக்காக 70 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றார் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Also Read: தமிழ் வருட பிறப்புக்கு வெளியாகும் 8 படங்கள்.. லாரன்ஸ்க்கு போட்டியாக வரும் விஜய் ஆண்டனி

ஏற்கனவே இவரிடம் எதற்காக சினிமாவிற்கு வந்தீர்கள் என்ற கேள்வி கேட்டபோது, நடிகையானால் தான் அதிக சம்பளம் கிடைக்கும், அதற்காகத்தான் ஹீரோயின் ஆக விரும்பினேன் என்று வெளிப்படையாகச் சொன்னார். அவர் சொன்ன சில வருடங்களிலேயே இப்போது கோடிகளில் சம்பளம் கேட்கக்கூடிய நடிகையாக மாறி இருக்கிறார்.

ஆனால் இதற்காக ராகவா லாரன்ஸும் ஸ்டேஜில் ஓவராக புகழ்ந்து பேசியது, வெளிப்படையாகவே அடுத்தடுத்த படங்களில் சேர்ந்து நடிக்க விருப்பம் தெரிவித்ததால், பிரியா பவானிக்கு சங்கர் சீக்கிரம் கிசுகிசுப்பில் சிக்கி விடுவார் போல் தெரிகிறது.

Also Read: பத்து தல சிம்புவுக்கு ஹாட்ரிக் வெற்றியா.. இது பத்து தலயா இல்ல பாதி தலையா.? முழு விமர்சனம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்