இயக்குனர் வாய்ப்பு வேண்டுமா? சேரனிடம் சீக்கிரம் வாங்க.. லைகாவுடன் செம சான்ஸ்

The search for the best director in Lyca and Cheran alliance: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் பல வெளிவந்தாலும், கொஞ்ச நாள் மட்டுமே கொண்டாடபடுகிறது. சிறந்த திரைக்கதை இல்லாமல் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போவது தமிழ் சினிமாவின் ஆக்கத்திற்கு அல்ல! அழிவுக்கே கொண்டு செல்கிறது.

முன்னணி நடிகர்கள் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் என பல வியூகங்களை வகுத்து, பட்ஜெட்டில் பெரும் பகுதியை நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் ஒதுக்கி படம் தயாரித்தாலும், முடிவில் வெற்றியோ எதிர்பார்த்த அளவு வசூலோ ஈட்ட முடிவதில்லை.

அஜித்தின் விடாமுயற்சி, தலைவரின் வேட்டையன் போன்ற பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை இயக்கி வரும் லைகா, இயக்குனர் சேரனுடன் கூட்டணி வைத்து தரமான சம்பவத்தை அரங்கேற்ற உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும் நடிகருமான சேரன், பொற்காலம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பாண்டவர் பூமி போன்ற குடும்ப பாங்கான பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

தனது படங்களில்  பிரம்மாண்டத்தை தவிர்த்து சமூக சீர்திருத்த கருத்தை வலியுறுத்தி குடும்ப பாங்கான திரைப்படங்களின் மூலம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி விடுவார்.

இந்த வெற்றி இயக்குனரை நடுவராக வைத்து, இன்றைய தலைமுறையினரை கவரும் வகையில் படம் இயக்கும் புதுமுக இயக்குனரை கண்டுபிடிக்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளது லைக்கா.

லைக்கா நடத்தும் சிறந்த இயக்குனருக்கான போட்டி

அதன்படி லைக்கா Frame to Fame என்ற குறும்பட போட்டி ஒன்றை நடத்தப் போவதாகவும்,  அதில் வெற்றி பெறுபவர்களுக்கு, தனது தயாரிப்பு நிறுவனத்தில் படம் இயக்கும் வாய்ப்பை அளிக்க போவதாகவும் உறுதி கூறியுள்ளது. பங்கேற்க ஏப்ரல் 7ம் தேதி கடைசி நாள்.

சிறந்த திரைக்கதை, தொழில்நுட்பத்தை கையாளும் திறன் என பல கட்டுப்பாடுகளை விதித்து, தமிழ் திரையுலகில் குறும்பட இயக்குனர்கள் நுழைவதற்கான கதவுகளை திறக்க உள்ளார்

சேரன்.

ஏற்கனவே இதே போல் கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் வெற்றிமாறன், பிரதாப் போத்தன், மதன் போன்றவர்களை நடுவர்களாக நியமித்து கார்த்திக் சுப்புராஜ், குட் நைட் மணிகண்டன் என பல கலைஞர்களை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சிறந்த இயக்குனர்களை கண்டெடுக்கும் முயற்சியாக லைக்காவின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

பிரம்மாண்ட பட்ஜெட் முன்னணி நடிகர்கள் என்ற கதை இல்லாமல் சிறந்த  திரைக்கதையுடன் உடன் வரும் இயக்குனரை கொக்கி போட்டு வளைத்து பெத்தலாபம் சம்பாதிக்கும் சூட்சமமே இது!

மற்ற மொழி திரைப்படங்களுக்கு ஆதரவு கொடுக்கும் இன்றைய சூழலில் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்கள் வருவது ஆரோக்கியமே!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்