நாசரேத்தில், பள்ளி நிர்வாகி, மற்றும் ஆசிரியர்கள் தன்னை ஆபாசமாக பேசி டார்ச்சர் கொடுப்பதாக தலைமை ஆசிரியை எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், மூக்குப்பீறி ஏக இரட்சகர்சபை நடுநிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து தற்போது பதவி உயர்வின் மூலம் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் சாந்தி என்பவர் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது :

நான் கடந்த 04.08.2015 அன்று காலை 10 மணிக்கு 8ஆம் வகுப்பு ஏபிரிவில் ஆங்கிலப் பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது, எனது தலைமையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் ராஜன், ரவி, பிராங்ளின் ஆகிய மூவரும் வகுப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மத்தியில் என்னை ஆபாசமாக பேசி, என்னை தற்கொலைக்கு தூண்டியதால் அந்த மூவர் மீது நாசரேத் காவல் நிலையத்தில் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அதிகம் படித்தவை:  Tamilrockers Fans, இணையதளத்தை கலக்கும் தமிழ்ராக்கர்ஸ் மீம்ஸ்கள் -சிறப்பு தொகுப்பு

தற்போது பள்ளி நிர்வாகியாக இருந்து வரும் மதுரம் மேற்படி குற்ற வழக்கினை வாபஸ் பெறு இல்லையேல், வேலையில் இருந்து நீக்கி விடுவேன் என்று என்னை தொடர்ந்து மிரட்டி வந்தார். இதுகுறித்து எனது கணவர் பள்ளி நிர்வாகி மதுரம் மீது கடந்த 25.02.2017 அன்று நாசரேத் காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார். இதனால் என்னை பழிவாங்கும் நோக்கில் பள்ளி நிர்வாகி மதுரம் மற்றும் ஆசிரியர்கள் ராஜன், ரவி,பிராங்ளின் ஆகியோர் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி 3 மாணவர்கள் மூலம் என்னுடைய டூவீலரை உடைத்து சேதப் படுத்தியுள்ளனர். இதுகுறித்து விசாரித்ததில் மாணவர்கள் 3பேர் தங்களது குற்றத்தை காவல் நிலையத்தில் ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  தமிழ் ராக்கர்ஸ் எடுத்த அதிரடி முடிவு.! ரசிகர்கள் அதிர்ச்சி.!

இதில் ஆத்திரம் அடைந்த பள்ளி நிர்வாகி மதுரம் என்மீது பொய் புகார் கூறி அடிக்கடி எனக்கு மெமோ கொடுத்து பழிவாங்கிக் கொண்டிருக்கிறார். மேற்படி குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு சாதமாக என்னை மிரட்டியும், என்னை அனுசரித்து போ என்று இரட்டை அர்த்தத்தில் பேசி அவமானப்படுத்தியும், அரசுப் பணியை செய்யவிடாமல் மன உளைச்சலுக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிற பள்ளி நிர்வாகி மதுரம், ஆசிரியர்கள் ராஜன், ரவி ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.