வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பிக் பாஸ் வீட்டுக்குள் சம்பவம் செய்த திமிங்கலம்.. எலிமினேட் ஆனாலும் லட்சத்தை சம்பாதித்த ரவீந்தர்

Bigg Boss 8 Tamil: விஜய் டிவியில் இந்த முறை ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை பற்றி சலசலப்பு வருகிறதோ, இல்லையோ நிகழ்ச்சியைதொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி பற்றி எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் கமலை ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு விஜய் சேதுபதியால் பண்ண முடியாது. அவருடைய அனுபவம் என்ன, திறமை என்ன, அதில் கால்வாசி கூட விஜய் சேதுபதியால் பூர்த்தி செய்ய முடியாது என்று சிலர் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது.

இன்னொரு பக்கம் விஜய் சேதுபதியால் நிச்சயம் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக கொடுக்க முடியும். அதற்கு தகுந்த நபர் தான் என்று சப்போர்ட்டாக பலரும் பேசி இருந்தார்கள். இந்த நிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்த விஜய் சேதுபதி யாருமே எதிர்பார்க்காத படி எதார்த்தமாக பேசி ஒவ்வொரு போட்டியாளர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டும் விதமாக தலையில் கொட்டி அவர்களுக்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஜவ்வு மாதிரி இழுத்து அடித்து பேசாமல் உடனுக்குடன் பதில், உடனுக்குடன் தீர்ப்பு என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு போட்டியாளர்களின் முகத்திரையை கிழித்து இதுதான் பிக் பாஸ் இப்படி தான் விளையாடனும் என்பதற்கு ஏற்ப ஒரு சம்பவத்தை செய்து விட்டார். இதனால் கமலின் இடத்தை விஜய் சேதுபதி ஓரளவுக்கு பூர்த்தி செய்துவிட்டார் என்பதற்கு ஏற்ப மக்கள் இவரை ஏற்றுக் கொண்டார்கள்.

இந்நிலையில் ஓட்டுக்கணிப்பின்படி அருண் பிரசாத் என்பவர் தான் கம்மியான வாக்குகளை சேகரித்து இருந்தார். இருந்தாலும் ரவீந்தரின் உடல்நிலை சரியில்லாமல் அடிக்கடி பிரச்சினை வருவதால் ரவீந்திரன் மனைவி மகாலட்சுமி பிக் பாஸ் இடம் கோரிக்கை வைத்திருக்கிறார். அதாவது என்னுடைய கணவர் அங்கே கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. அதனால் அவரை தயவு செய்து வெளியே அனுப்பி விடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

அதன்படி பிக் பாஸ் எடுத்த முடிவுதான் ரவீந்தர் எலிமினேட் ஆகி வெளியே வந்திருக்கிறார். ஆனால் ஒரு வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த 19 போட்டியாளர்களில் இவர் ஒருவர் தான் வித்தியாசமாகவும் விறுவிறுப்பான கன்டென்ட் கொடுத்து பார்க்கும் மக்களுக்கு மிகப்பெரிய என்டர்டைன்மென்ட் செய்திருக்கிறார். மற்ற போட்டியாளர்கள் எல்லாம் சும்மா வெத்துவிட்டு தான் ரவீந்தர்தான் கெத்து என்று சொல்வதற்கு ஏற்ப ஒரு சம்பவத்தை பிராங்க் மூலம் நடத்திருக்கிறார்.

ஆனால் தற்போது இவர் இல்லாத பிக் பாஸ் எப்படி இருக்க போகிறது, மற்ற போட்டியாளர்கள் எப்படி சுவாரசியத்தை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால் இதற்கு இடையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு வாரமாக இருந்த ரவீந்தர் வாக்கிய சம்பளம் என்னவென்று தகவல் கசிந்து இருக்கிறது. அந்த வகையில் ஒரு நாளைக்கு 50000 ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார்.

மொத்தம் 7 நாட்களுக்கு 3.5 லட்ச ரூபாய் சம்பளத்தை வாங்கி இருக்கிறார். அத்துடன் மற்ற போட்டியாளர்களை விட ரவீந்தர்தான் அதிகமாக சம்பளம் வாங்கும் போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News