The rock

ட்வயனே ஜான்சன் , நவோமி ஹாரிஸ் நடிப்பில் சுமார் ஸ்பெஷலாக வெளியாகியுள்ள படம். இதே பெயரில் உள்ள வீடியோ கேமினை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதையை ரியான் என்கில் எழுத பிராட் ப்ரீயட்ன் இயக்கியுள்ளார்.

கதை

கார்பொரேட் நிறுவனம் தடை செய்யப்பட்ட மரபணு ஆராய்ச்சியை விண்வெளியில் வைத்து செய்கிறது. அது அங்கு கை மீறி செல்ல சில மரபணு கொண்ட கேப்ஸுல்கள் உலகத்தில் சில இடங்களில் விழுகின்றது.

விலங்குகள் சரணாலயத்தில் கொரில்லா வகை குரங்குகளை பராமரிப்பது தான் தி ராக்கின் வேலை. முன்னாள் ராணுவ வீரர், மற்றும் விலங்குகளை வேட்டையாடுபவர்களை வேட்டையாடுபவர்.

அதிகம் படித்தவை:  இவர்களில் எந்த கிரிக்கெட் வீரரின் மனைவி ரொம்ப அழகா இருக்காங்க?? நீங்களே பாருங்கள்!!

இவர் பராமரிப்பில் உள்ள ஜார்ஜ் என்ற அல்பினோ வகை குரங்கும் பாதிப்படைகிறது. அசுரவளர்ச்சி, அடித்து மீறும் கோபம் என தன்னிலை இழக்கிறது மிருகம். ஒரு புறம் அதை சரி செய்ய ஆராய்ச்சியாளரான ஹீரோயினுடன் போராடுகிறார். மறுபுறம் காட்டில் அதீத வளர்ச்சி பெற்ற ஓநாய், ராட்சச முதலை என விறுவிறுப்பாகிறது கதை.

Rampage

ஒரு புறம் நம் ஹீரோ, மறுபுறம் எனெர்ஜிக்கா என்ற அந்த தனியார் நிறுவனம், மூன்றாவதாக அரசும், மிலிட்ரியும் என இவர்களுக்குள் நடக்கும் மும்முனை போட்டியே மீதி கதை.

அக்ஷன், செண்டிமெண்ட் அதீத கிராபிஸ், ஸ்டண்ட் என பட்டயகெளப்புது படம்.

அதிகம் படித்தவை:  100 கோடி கிளப்பில் இணைந்த நடிகை அமலாபால்
சினிமாபேட்டை அலசல்

நாம் எளிதில் யூகிக்கக்கூடிய கதை. திரைக்கதையிலும் பெரிய சுவாரசியம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இது குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டதா ? அல்லது பெரியவர்களுக்கா என்ற குழப்பம் கடைசி வரை நமக்கு உள்ளது.

சினிமா பேட்டை வெர்டிக்ட்
RAMPAGE

பிக் ஆன கொரில்லாவை வைத்து பிக்கரான முதலை , மற்றும் ஓநாயாவை வேட்டை ஆடும் இப்படத்தில் செண்டிமெண்ட் தூக்கலாக இருந்தாலும் இறுதியில் நமக்கு திருப்த்தி என்ற ஒன்று ஏனோ குறைகிறது. போர் அடிக்கும் பட்சத்தில் ஒருமுறை பார்க்கலாம்.

சினிமாபேட்டை ரேட்டிங் 2.5/5