திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே உள்ள உறவில் ஏற்பட்ட விரிசல்.. பழிக்குப்பழி வாங்கிய காங்கிரஸ்!

தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி இன்று தனது பிரச்சாரத்தை கோவையில் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும், திமுகவை காங்கிரஸ் பழிக்கு பழி வாங்கிவிட்டது என்றும் பரவலாக பேசப்படுகிறது.

ஏனென்றால், தற்போது கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ராகுல்காந்தி தனித்து பிரச்சாரம் மேற்கொண்டிருப்பது இரு கட்சிகளுக்கான உறவில் விரிசல் ஏற்பட்டதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. அதோடு காங்கிரஸ் தனித்துப் போட்டியிட நினைத்து இந்த செயல்களை செய்கிறதா என்ற குழப்பமும் அரசியல் களத்தில் நிலவி வருகிறது.

மேலும், திமுக புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேர்தலில் தனித்து போட்டியிட திட்டமிட்டதோடு, ஜெகத்ரட்சகனை முதல்வர் வேட்பாளராக திமுக அறிவித்ததால் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே கொதித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மக்கள் நீதி மையம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இது ஒருபுறமிருக்க, தற்போது தமிழகத்தில் பிரச்சாரம் செய்து வரும் ராகுல் காந்தி எந்த வகையில் பிரச்சாரத்தை மேற்கொள்ளப் போகிறார் என்ற திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ராகுல் காந்தி திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கப் போவதாக எந்த ஒரு தகவலும் இல்லை. அதேபோல், காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், ராகுல் காந்தி டெல்லியில் இருந்து வந்த கையோடு முதலில் திமுக கட்சி தலைவரான ஸ்டாலினை தான் சந்தித்திருக்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல், டெல்லியிலிருந்து கூட்டணி தலைவர்கள் தமிழகம் வரும்போது அவர்களை வரவேற்று கூட்டணிக் கட்சித் தலைவர் டிவிட்டரில் தகவல் தெரிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இதுவரை ராகுல் காந்தியின் வருகை பற்றி ஸ்டாலின் எந்த ஒரு பதிவையும் போடவில்லை. இந்த இரண்டு காரணங்களாலும் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்து உள்ளதா? இல்லையா? என்பது பற்றிய சந்தேகம் மேலோங்கி காணப்படுகிறது.

இவை அனைத்தும் இவ்விரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள விரிசலை தெள்ளத்தெளிவாக காட்டுவதாக அரசியல் நோக்கர்கள்  கூறுகின்றனர். மேலும், இவை அனைத்தும் திமுக காங்கிரஸ் கட்சியை புதுச்சேரியில் கழட்டிவிட்டதன் பிரதிபலிப்பு தான் என்றும், திமுகவின் அணுகுமுறையால் காங்கிரஸ் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் ஆணித்தனமாக அடித்துக் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

dmk
Elections- Congress president Rahul Gandhi in Tamil Nadu
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்