கௌதமேனன் எடுத்த பாடத்தால் கேள்விக்குறியாகும் விடாமுயற்சி.. டாம் அண்ட் ஜெர்ரி மூடில் மகிழ் மற்றும் அஜித்

The rift between Ajith and MagizhThirumeni in vidaamuyarchi movie: கடந்த ஆண்டு வெளியான துணிவு திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் அஜித், தமிழ் சினிமாவில் தடம் பதித்த வெற்றி இயக்குனர் மகிழ்திருமேனி உடன் விடாமுயற்சியில் கைகோத்தார்.

முன்தினம் பார்த்தேனே படத்தின் மூலம் இயக்குனர் ஆன மகிழ்திருமேனி தமிழ் சினிமாவில் செல்வராகவன் மற்றும் கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

கௌதமின் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில்  உதவி இயக்குனராக மகிழ்திருமேனியின் பங்கு அதிகம்.

விடாமுயற்சியில் அஜித்துடன் கூட்டணி சேர்ந்த மகிழ்

துணிவு படத்திற்கு பின் அஜித்தின் அடுத்த இயக்குனர் பற்றி பல  முன்னணி இயக்குனர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தை இயக்குவதாக இருந்தது.

அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் பட்ஜெட் மற்றும் கதையில் ஏற்பட்ட அதிருப்தியினால் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக ஏகே 62 வில் மகிழ்திருமேனி ஒப்பந்தமானார்.

படம் குறித்த நேரத்தில் ஆரம்பிக்காமல் தாமதமாகி கொண்டே சென்று  கடந்த ஆண்டு மே  மாதம் அஜித்தின் பிறந்த நாளை ஒட்டி படத்தின் டைட்டில் வெளியானது.

அது தவிர எந்த ஒரு அப்டேட்டும் கொடுக்காமல் படப்பிடிப்பு  அஜர்பைஜான் நாட்டில்  விறுவிறுப்பாக நடந்து வந்தது.  

எல்லாம் சரியாக போய்க் கொண்டிருக்கும் வேளையில் திடீரென  அஜித்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் பணி தனக்கு திருப்தி தரவில்லை என்று ஒளிப்பதிவாளரை மாற்றினார் இயக்குனர்.

தான் சிபாரிசு செய்த ஒளிப்பதிவாளரை மாற்றியது அஜித்திற்கு பிடிக்காத போதும் படத்தின் நலனுக்காக பொறுமை காத்தார் அஜித். 

படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எடுத்த காட்சிகள் திருப்தி தரவில்லை என்று காட்சிகளை மீண்டும் மீண்டும் படமாக்கினார் இயக்குனர்.

தனது குரு, இயக்குனர் கௌதம் மேனனும் இப்படி தான் பட காட்சிகள்  எடுப்பதில் சீக்கிரம் திருப்தியாக மாட்டாராம்.  

காட்சிகளை திரும்பத் திரும்ப எடுத்து தனக்கு சரி என்று பட்டால் மட்டுமே படத்தில் வைத்துக் கொள்வாராம். படத்திலும் தாமதம், ரிலீசிலும் தாமதம். அதே பாணியை பின்பற்றி வருகிறார் மகிழ்.

அஜித்தின் அடுத்த படம் குட் பேட் அக்லி

விடாமுயற்சியில் ஏற்பட்ட தாமதத்தினால் பொறுத்து பார்த்த அஜித், ஒரு கட்டத்தில் வெறுத்துப் போனார். 

கலை இயக்குனர் மிலனின் இறப்பு,  லைக்காவின் நிதி நெருக்கடி என பல  காரணங்களால் விடா முயற்சிக்கு விடுமுறை கொடுத்தார் அஜித்.

தற்போது ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில்  இணைந்து உள்ளார் அஜித். 2025 ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் நோக்கின்  விறுவிறுவென தயாராகி வருகிறது அஜித்தின் குட் பேட் அக்லி.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்