வியாழக்கிழமை, பிப்ரவரி 20, 2025

முன்ன போல இப்போ வருமானம் இல்ல.. பிரபலத்தை கழட்டி விட்ட விஜய் டிவி

விஜய் டிவியில் இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் 5 நிகழ்ச்சிகளை மக்களிடம் கொண்டு சென்றடைந்தில் உலக நாயகன் கமலஹாசனின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. இவர் பங்கேற்கும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளை பார்ப்பதற்கென்றே ரசிகர்கள் அந்த வாரம் முழுவதும் காத்துக் கிடப்பார்கள்.

ஆகையால் விஜய் டிவியின் புது முயற்சியான ஓடிடி தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை துவங்கிய போதும் கமலஹாசனை பிக்பாஸ் அல்டிமேட்டையும் தொகுத்து வழங்க வைத்தனர். அந்த நிகழ்ச்சியும் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்ய தயங்கிய கமல், அதன்பிறகு கோடிக்கணக்கில் சம்பளம் தருவதாக விஜய் டிவி கொடுத்த ஆஃபரை ஏற்றுக்கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒத்துக் கொண்டாராம்.

ஆனால் தொடக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு இப்பொழுது இல்லை என்பதால் அடுத்தடுத்த எபிசோட்டிற்க்கு கமல் எதிர்பார்த்த சம்பளத்தை விஜய் டிவியால் கொடுக்க முடியவில்லை.

ஆகையால் வேறு வழி இன்றி கம்பெனிக்கு கட்டுப்படி ஆகாது என்ற காரணத்திற்காகவே விஜய் டிவி, கமலஹாசனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கழட்டி விட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் கமலஹாசன் பிக்பாஸில் இல்லாமல் போனது விஜய் டிவிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதே நிதர்சனமான உண்மை.

இருப்பினும் வேறு வழியில்லாமல் விஜய் டிவி எடுத்த முடிவுக்கு ரசிகர்கள் ஒத்துழைத்து, அடுத்ததாக கமலஹாசனுக்கு பதில் தொகுத்து வழங்கப் போகும் புது நடிகரை ஏற்றுக் கொள்வார்களா அல்லது விமர்சிப்பார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News