அதிதியை திருமணம் செய்து கொள்ள இப்படி ஒரு காரணமா.? சித்தார்த் பற்றி புட்டு புட்டு வைத்த பிரபலம்

Siddharth : சமீபத்தில் அதிதி ராவ் மற்றும் சித்தார்த்தின் திருமணம் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் அதிதியை சித்தார்த் திருமணம் செய்து கொள்ள முக்கிய காரணம் இருப்பதாக பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

அதாவது அதிதியின் சொத்திற்கு ஆசைப்பட்டு தான் சித்தார்த் திருமணம் செய்ததாக பகிர் தகவலை சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். சித்தார்த்துக்கும் எனக்கும் பல வருடங்களுக்கு முன்பே ஒரு பிரச்சனை நடந்தது. நான் பிரஸ் மீட்டுக்கு வந்தால் சித்தார்த் வரமாட்டேன் என்று சொன்னார்.

இப்போது அவருடைய மார்க்கெட் தான் சரிந்து கிடைக்கிறது. கமலின் மகள் ஸ்ருதிஹாசனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த சித்தார்த் அதன் பிறகு நடிகை சமந்தாவுடன் பழகி வந்தார். அதுவும் சில நாட்களிலேயே கசந்துவிட்டது. மேலும் சித்தார்த் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தை பெற்றவர்.

அதிதியை சித்தார்த் திருமணம் செய்து கொள்ள காரணம்

அதேபோல் தான் அதிதி ராவும் ஏற்கனவே திருமணம் செய்து விவாரத்தை பெற்று இருக்கிறார். இதனால் இருவருக்கும் ஒத்துப் போய்விட்டது. இதில் என்ன ஒரு விஷயம் என்றால் அதிதி ராவ் மிகவும் கோடீஸ்வர வீட்டு பெண். அதுவும் சித்தார்த் வீட்டு முறைப்படி திருமணம் நடக்கவில்லை.

அதிதி ராவ் குடும்ப வழக்காக படி 400 ஆண்டுகள் பழமையான கோயில் இவர்களது திருமணம் நடந்துள்ளது. மேலும் அதிதி ஆஸ்தி அத்தனையும் இப்போது சித்தார்த்-க்கு தான் வரப்போகிறது. இதனால் அவர் முன்பே வரதட்சனை குறித்து எதுவும் பேசவில்லை.

எப்படியும் கோடீஸ்வரர் வீட்டு பெண் என்பதால் அனைத்தும் தனக்கு தான் வரும் என்று சித்தார்த் கணக்கு போட்டு இருக்கிறார் என்று பயில்வான் கூறியுள்ளார். கடைசியாக இது மட்டும் நோக்கமாக இல்லாமல் இவர்களுக்குள் காதல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

கோலாகலமாக நடந்த அதிதி, சித்தார்த் திருமணம்

- Advertisement -spot_img

Trending News