Tamil Cinema News | சினிமா செய்திகள்
சினிமாவில் யோகிபாபுவின் தாறுமாறான வெற்றிக்குக் காரணம் இவர் தானாம்.. மிரண்டு போன கோலிவுட்
தமிழ் சினிமாவில் செந்தில், கவுண்டமணி வரிசையில் டாப் காமெடியன் ஆக இருப்பவர் யோகிபாபு. ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கியவர் தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்.
சமீபத்தில் யோகி பாபு அளித்த பேட்டியில் தனது சக்சஸ்காக தான் எப்பொழுதும் பின்பற்றும் ஒரே விஷயம், இதுதான் என்று உடைத்துள்ளார். இதைக் கேட்ட சக நடிகர்கள் பயங்கர ஷாக்காகினர்.
‘எப்போதும் குறிக்கோள் மற்றும் கனவை நோக்கி ஓட வேண்டும், திரும்பி பார்க்கக் கூடாது’ என்ற கவுண்டமணியின் அட்வைஸை பின்பற்றியது தான் எனது சினிமா வளர்ச்சிக்கு காரணம் என்று யோகி பாபு தனது வெற்றியின் ரகசியத்தை கூறி உள்ளார்.

yogibabu
நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த யோகி பாபுவிற்கு வடிவேலு, விவேக் உள்ளிட்ட காமெடி நடிகர்களிடம் இருந்து பாராட்டு குவிந்தது.
அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் பல படங்களில் கதாநாயகனாகவும் நகைச்சுவை நடிகராகவும் கமிட்டாகி ரொம்ப பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சிறு துரும்பாய் திரைத்துறையில் தோன்றி தற்போது பெரிய மலையாய் காமெடியில் நிலைத்து நிற்கும் யோகி பாபுவிற்கு ஃபேன்ஸ் பட்டாளம் ஏராளம்.
