விவாகரத்துக்கு நா போட்ட அந்த கண்டிஷன்தான் காரணம்! ஜி.வி.பிரகாஷ் மதிக்கவே இல்ல, சைந்தவி ஓபன் டாக்!

சினிமா பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெறுவது அதிகரித்துள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி விவகாரம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ஜென்டில்மேன் படத்தில் வரும் குச்சி குச்சி ராக்கம்மா என்ற பாடல் அப்போது பட்டி தொட்டியெல்லாம் பிரபலம்.

இப்பாடலை பாடியவர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹெனாவின் மகன் ஜி.வி.பிரகாஷ் குமார். சினிமாவில் சிறு வயதிலேயே அறிமுகமாகி இருந்தாலும் சில ஆண்டுகள் கழித்து கடந்த 2006 ஆம் ஆண்டு வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

வசந்த பாலன் இயக்கத்தில், பசுபதில், பரத் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷின் இசையும் பக்கபலமாக அமைந்தன. முதல் படத்திலேயே கவனம் பெற்ற அவர், அடுத்து, சூப்பர் ஸ்டாரின் குசேலன், செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், மயக்கன் என்ன ஆகிய படங்களிலும் இசையமைத்து வரவேற்பை பெற்றார். திரைத்துறையில் சூரரைப் போற்று படத்திற்கான சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது பெற்றார்.

இசையில் மட்டுமில்லாமல், குசேலன், நான் ராஜாவாகப் போகிறேன், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, தலைவா, டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில் ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமான அவர், சமீபத்தில் தன் 11 வருட திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்தார்.

அதாவது, தன் பள்ளி காலம் முதல் காதலித்து வந்தவரும் பிரபல பின்னணி பாடகருமான சைந்தவியை பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. இவர்கள் இருவரும் இணைந்து சினிமாவில் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. இந்த நிலையில் இவர்களின் 22 ஆண்டு காதல் முடிவுக்கு வந்து விவாகரத்தானது பற்றி இன்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இசையமைப்பாளர இருந்த அவர், நடிகராகி 10 ஆண்டுகளாகியுள்ள நிலையில், நடிப்பில் கவனம் செலுத்திய பின் தான் அவர் மாறியதாகவும், இதுவே விவாகரத்துக்கு காரணம் என்று தகவல் வெளியானது. ஊடகங்கள் பல கூறினாலும், இருவரும் புரிந்துணர்வுடன் பிரிவதாக தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தனர். சமீபத்தில் ஜிவி.பிரகாஷின் தாய் ஏ.ஆர்.ரஹெனா, சைந்தவி வீட்டிற்கு திரும்ப வரவேண்டும். என் மகளைக் காட்டிலும், சைந்தவியிடம் நான் அதிகம் மனம் விட்டு பேசுவேன்’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பு தொழில்லு சென்றதுதான் பிரிவுக்கு காரணம் என்று பேசப்பட்ட நிலையில், தற்போது இதுகுறித்து சைந்தவி கூறியுள்ளதாவது: ஜிவி.பிரகஷ் நடிக்கப்போகிறேன் என்று சொன்னதும் நான் சில கண்டிசங்களைப் போட்டேன். ஆனால், அவர் எதையுமே கேட்கவிலை; சினிமாவில் நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளைப் பார்த்தபோது எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது என்று பேசியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் பதிலளிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

- Advertisement -spot_img

Trending News