Tamil Cinema News | சினிமா செய்திகள்
எஸ்பிபி-யின் மறைவுக்கு காரணம் மருத்துவமனையின் தவறே.. கிழித்த மருத்துவர்!
உலக அளவில் அதிகப்படியான மரணங்கள் நிகழ்வதற்குக் காரணம் தவறான அலோபதி சிகிச்சைகளே எனக் கூறுகிறது சில ஆய்வுகளின் முடிவுகள்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் கடந்த மாதம் சிகிச்சை பலனின்றி மறைந்தார். மொத்த திரையுலகமும், தமிழகமும் அவருக்காக வருந்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் கூறியிருக்கும் தகவல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
அதாவது எஸ் பி பாலசுப்ரமணியம் தவறான சிகிச்சையால் தான் மரணம் அடைந்தார் என்று அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட பல பிரபலங்களுக்கு சிகிச்சை அளித்த, மருத்துவ உலகத்தின் கொடூரமான முகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளார் சங்கர்.
மேலும் அவர்,” சாதாரணமாக இருப்பவர்கள் 24 மணி நேரம் ஏசியில் இருந்தால் கூட கிட்னி, நுரையீரல் பாதிப்பு, இதய பிரச்சனை போன்றவை அதிகமாக காணப்படும் என்றும், இதுவே உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்களாக இருந்தால் நோயின் தாக்கம் வேகமாக அதிகரிக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் என். எம். சங்கர் எஸ்பிபி பற்றி கூறுகையில், “தொண்டையில் சளி இருப்பதால் சாதாரணமாக மருத்துவமனைக்கு சென்றார் எஸ்பிபி. அவருக்கு ஸ்டீம் கொடுக்காமல், சூரிய வெளிச்சத்தை சிறிதளவுகூட காட்டாமல் முழு நேரமும் ஏசி அறையிலேயே அவரை வைத்து நோயின் தன்மையை அதிகரித்ததே அந்த அலோபதி மருத்துவமனை தான்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் எம் என் சங்கர்,”மருத்துவமனையில் உள்ள ஏசியால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக உணவு நேரடியாக செல்வதற்கு தொண்டையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரை புண்ணாகி உள்ளார்கள். இந்த அறுவை சிகிச்சையால் அவர் உயிர் பிழைத்து இருந்தால் கூட அவரால் பாடியிருக்க முடிந்திருக்காது” என்று விளக்கம் அளித்துள்ளார்.
இவ்வாறு அலோபதி மருத்துவமனைகளின் முகத்திரையைக் கிழித்து நமக்கு வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் அக்குபஞ்சர் மருத்துவர் எம் என் சங்கர்.

spb-status-hospital-cinemapettai
