Sports | விளையாட்டு
சிஎஸ்கே-வின் படுதோல்விக்கு காரணம் சொல்லி நழுவும் தோனி.. அதிர்ச்சியான ரசிகர்கள்!
உலக அளவில் டாப் டி20 அணியாகக் கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை கிட்டத்தட்ட பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து சென்னை சிஎஸ்கே அணி ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.
ஏனெனில் ஆரம்பத்தில் கடைசி ஓவர்களில் தோல்வியடைய தொடங்கிய சிஎஸ்கே அணி தற்போது மோசமான தோல்விகளை பெற்று வருகிறது.
இந்த வகையில் நேற்று (அக்- 23) இரவு நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே மிக மோசமாக தோல்வியடைந்தது. மேலும் இதைப்பற்றி சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறியிருக்கும் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அதாவது சிஎஸ்கே தனது வரலாற்றிலேயே முதல் முறையாக 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்கு சென்றது. மேலும் சாம் கரண் பொறுப்பாக விளையாடியதன் காரணமாகவே சென்னை அணி 100 ரன்களை தாண்டி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை எடுத்திருந்தது.
இதன் பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஓவரிலேயே போட்டியை முடித்து வெற்றியை பெற்றது.
மேலும் இதைப்பற்றி போட்டி முடிந்த பிறகு தோனி கூறுகையில், ‘இந்தத் தோல்வி வேதனையளிக்கிறது. இது எங்களுக்கான ஆண்டாக அமையவில்லை. கிரிக்கெட்டில் கடினமான கட்டம் வரும்போது கொஞ்சம் அதிர்ஷ்டம் கை கொடுத்தால் தான் வெற்றி பெற முடியும். இந்த தொடரில் எங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் மும்பை இந்தியன்ஸ் கேப்டனான போலார்டு சாம் கரண் சிறப்பாக விளையாடினார் என பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சென்னை அணி படுதோல்வி அடைந்ததை எண்ணி சிஎஸ்கே ரசிகர்கள் குமுறி கொண்டிருக்கின்றனர். ஆனால் மறுபுறமோ கேப்டன் தோனி, ‘கழுவுற மீனில் நழுவுற மீனை போல்’ அணியின் தோல்விக்கு பல காரணங்களை கூறி இருப்பது சிஎஸ்கே வெறியர்களை கடுப்பாக்கி உள்ளது.

csk-team
