புறக்கணிக்கப்படுகிறதா தளபதியின் கோட் படம்?. ரஜினி, விஜய் போன்ற ஹீரோக்களை சறுக்க வைக்கும் சூதாட்டம்

Thalapathy Vijay: தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் இப்போதைக்கு ரஜினி மற்றும் விஜய் படங்களை நம்பித்தான் இருக்கிறது என்பது பல சினிமா விமர்சகர்களின் கருத்து. இவர்களை நம்பித்தான் தயாரிப்பாளர்கள் கோடி கணக்கில் முதலீடு செய்ய காத்து கிடக்கிறார்கள்.

பாக்ஸ் ஆபிஸில் கிங்மேக்கர் ஆக இருக்கும் இவர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது எல்லாம் படம் மொக்க, பிளாப் என்று தொடர்ந்து சொல்லப்படுகிறது. தொடர்ந்து தோல்வி படங்களை கொடுக்கும் இவர்களின் மார்க்கெட் எப்படி இன்னும் சரியாமல் இருக்கிறது.

தயாரிப்பாளர்கள் மீண்டும் மீண்டும் இவர்களை நம்பி எப்படி முதலீடு செய்கிறார்கள் என்பது பலரது சந்தேகமாக இருக்கும். உண்மையில் இந்த ஹீரோக்களின் படங்களின் நிலவரம் எல்லாம் எப்படித்தான் இருக்கிறது என இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னால் இருந்த தமிழ் சினிமா இப்போது கிடையாது. முன்பெல்லாம் ஒரு படத்திற்கு பெரிய விளம்பரம் என்பதே செய்தித்தாள்கள் தான். ஒரு படம் ஆரம்பிப்பதிலிருந்து, ரிலீஸ், விமர்சனம் என எல்லாமே நாளிதழ்கள் மற்றும் புத்தகங்களை நம்பி இருக்கும்.

ரஜினி, விஜய் போன்ற ஹீரோக்களை சறுக்க வைக்கும் சூதாட்டம்

25 நாட்களை கடந்து, 50 நாட்களைக் கடந்து, 100 நாட்களைக் கடந்து என படங்களுக்கு விளம்பரங்கள் வரும். சந்திரமுகி படம் சாந்தி தியேட்டரில் 365 நாட்கள் ஓடியது நம்மில் பலருக்கும் நினைவிருக்கும். படங்களுக்கு வெள்ளி விழா, பொன்விழா எல்லாம் கூட கொண்டாடப்பட்டது.

ஆனால் இப்போது மூன்றாவது நாளே சக்சஸ் மீட் வைத்து முடித்து விடுகிறார்கள். ஒரு வாரத்திற்கு மேல் எப்பேர்ப்பட்ட பெரிய ஹீரோவின் படமும் ஒரு தியேட்டரில் ஓடுவது இல்லை. இதற்கான காரணத்தை வலைப்பேச்சு சேனலின் பிஸ்மி கூறி இருக்கிறார்.

அதாவது முன்பெல்லாம் ஊருக்கு ஒரு பெரிய தியேட்டர் இருக்கும், இரண்டு மூன்று சின்ன தியேட்டர்கள் இருக்கும். படம் ரிலீஸ் ஆகி முதல் இரண்டு மூன்று வாரங்களுக்கு அந்த பெரிய தியேட்டரில் தான் புது படம் ஓடும். ஒரு மாதம் கழித்து தான் அந்த சின்ன தியேட்டருக்கு படம் வரும்.

இதனால் எப்போதுமே தியேட்டர்களில் கூட்டம் கூடும். ஆனால் தற்போது ஊருக்கு பத்து தியேட்டரில் ஒரே படம் ரிலீஸ் ஆகிறது. ஒரு ஹீரோவின் படம் தமிழ்நாட்டில் எத்தனை திரையரங்குகளில் ஓடுகிறது என்பதை வைத்து தான் அந்த ஹீரோவின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

1500 தியேட்டரில் இன்னைக்கு இந்த படம் ரிலீஸ் ஆனது என சொல்லும் கெத்தை தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். முதல் நாளே அந்த 1500 தியேட்டரில் மக்களில் பாதி பேர் படத்தை பார்த்து விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.

முதல் நாளில் டிக்கெட் கிடைக்காதவர்கள் அடுத்த இரண்டு நாட்களில் பார்த்து முடித்து விடுகிறார்கள். அதன் பின்னர் அந்த படத்தை பார்ப்பதற்கு தியேட்டருக்கு ஆட்கள் வருவதில்லை. இதனால் எவ்வளவு பெரிய ஹீரோவின் படமாக இருந்தாலும் தியேட்டரில் ஈ ஓடுகிறது.

ஆன்லைன் ஆப்புகளில் படம் டிக்கெட் புக் பண்ணும் போது எந்தெந்த இருக்கைகள் காலியாக இருக்கிறது என்பதை காட்டுகிறது. இதை நெட்டிசன்கள் தங்களுடைய ஃபோன்களில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்.

அதேபோன்று தியேட்டருக்கு போகிறவர்கள் தியேட்டர்காலியாக இருப்பதாக போட்டோ எடுத்து அதையும் சமூக வலைத்தளத்தில் பரப்புகிறார்கள். தியேட்டரில் ஆளே இல்லாமல் இருக்கிறது என்று தெரிந்ததும் நம் மனதிற்குள்ளேயே இந்த படம் அப்போ நல்லா இல்லை என நினைத்துக் கொள்கிறோம்.

இதனாலேயே பல படங்களை பார்க்க மக்கள் தியேட்டருக்கு போவதில்லை. அப்படி தான் தற்போது கோட் படத்தின் நிலைமையும் ஆகிவிட்டதாக பிஸ்மி சொல்லி இருக்கிறார். அதிக தியேட்டர்கள் தான் இது போன்ற சம்பவங்களுக்கு காரணங்களாக இருப்பதாகவும் பிஸ்மி குற்றம் சாட்டியிருக்கிறார்.

வசூலை அள்ளும் கோட்

- Advertisement -spot_img

Trending News