வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சிங்கப்பெண்ணில் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த மித்ரா.. மகேஷ் அடித்ததற்கு இதுதான் காரணம்

Singapenne: சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ பார்த்தவர்களுக்கு மகேஷ் எதற்காக மித்ராவை அடிக்கிறான் என்ற சந்தேகம் இருக்கும். மித்ராவின் பேச்சை மொத்தமாக நம்பி மகேஷ் இந்த வாரம் முழுக்க அன்பு மற்றும் ஆனந்தியை பாடாய்படுத்தி எடுத்து விட்டான்.

இனி சிங்க பெண்ணே சீரியலில் மகேஷ் தான் வில்லன் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று மகேஷ் அன்பு மற்றும் ஆனந்தி முன்னாடி மித்ராவை ஓங்கி கன்னத்தில் அடித்திருக்கிறான். மகேசுக்காக அன்பு ஆனந்தியின் காதலை உதறி தள்ளிவிட்டு வெளிநாட்டுக்கு போக முடிவெடுத்து இருந்தான்.

மகேஷ் அடித்ததற்கு இதுதான் காரணம்

அதே நேரத்தில் அன்பு தான் அழகன் என மகேசை நம்ப வைக்க மித்ரா ஒரு கடிதத்தை எழுதி ஆனந்தி கைக்கு சேரும்படி பண்ணினாள். ஒரு வேலை இந்த கடிதம் வராமல் இருந்திருந்தால் ஆனந்திக்கு அழகனின் ஞாபகம் சுத்தமாய் வந்திருக்காது.

இந்த அளவுக்கு ஆனந்தி கோபப்பட்டு மீண்டும் அழகனை தேட வேண்டும் என இறங்கி இருக்க மாட்டாள். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி மாதிரி, அழகன் என்ற பெயரில் லெட்டரை போட்டு இப்போ அன்பு மற்றும் ஆனந்தியை சேர்த்து வைத்திருப்பதே மித்ரா தான்.

நேற்றைய எபிசோடில் மகேஷின் அம்மா மித்ராவுக்கு போன் பண்ணி அன்பு தான் அழகன் என நம்ப வைக்க ஏதோ திட்டம் போடுகிறாய் என்று சொன்னாயே, மகேஷ் வீட்டில் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறான் என கேட்கிறார்கள்.

கண்டிப்பாக மகிழ்ச்சி இவர்கள் இரண்டு பேரும் பேசுவதை கேட்டிருக்க வேண்டும், அதனால் தான் மித்ராவுக்கு அப்படி ஒரு அடி விழுந்திருக்கிறது. எது எப்படியோ இந்த கண்கொள்ளா காட்சியை இன்றைய எபிசோடில் பார்த்து சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.

- Advertisement -

Trending News