மச்சானால் குடும்பத்திற்குள் வெடித்த சண்டை.. ஜெயம் ரவி, ஆர்த்தி பிரிவுக்கு இதுதான் காரணமா.?

Jayam Ravi : ஜெயம் ரவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயமாக இன்று அவர் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ததாக அறிக்கை வெளியிட்டிருந்தார். கிட்டத்தட்ட 15 வருட திருமண வாழ்க்கையில் இருந்து ஜெயம் ரவி விலகுவதற்கான காரணம் என்ன என்று பல ஊடகங்களில் செய்தி வெளியாகி கொண்டிருக்கிறது.

இப்படி ஒரு ஜோடியா என எல்லோரும் கண் வைக்கும் அளவுக்கு ரொமான்டிக் புகைப்படங்களை ஆர்த்தி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவார். அன்னோனியமாக இருந்த இந்த தம்பதிகளின் மணவாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டது ஜெயம் ரவியின் மச்சானால் தான் என்று பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறி இருக்கிறார்.

அதாவது சபிதா ஜோசப் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி, ஆர்த்தி குடும்ப விஷயத்தை பேசி இருந்தார். ஜெயம் ரவியின் சில படங்களை அவரது மாமியார் சுஜாதா தயாரித்து உள்ளார். சில படங்கள் வெற்றி பெற்றாலும் அதில் ஒரு சில படம் தோல்வியும் தழுவி இருக்கிறது.

ஜெயம் ரவி, ஆர்த்தி பிரிவுக்கான காரணம்

இந்நிலையில் சுஜாதாவுக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ள நிலையில் சங்கர் என்ற வளர்ப்பு மகனை வளர்த்து வந்துள்ளார். அவர்தான் சுஜாதாவின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இதர சொத்துகளை நிர்வகித்தார். மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைந்து சுஜாதா ஒரு படம் எடுப்பதாக இருந்துள்ளது.

ஆரம்பத்தில் நஷ்டம் சந்தித்ததால் தன்னுடைய மகன் சங்கரின் பேச்சை கேட்டு தான் நடக்க வேண்டும் என்று சுஜாதா ஜெயம் ரவியிடம் கண்டிஷன் போட்டதாக பத்திரிக்கையாளர் கூறியிருக்கிறார். இதனால் ஆர்த்தி மற்றும் ஜெயம்ரவி இடையே வீட்டிற்குள் பிரச்சனை வந்துள்ளது.

நாளடைவில் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்க இருவரும் விவாகரத்து பெற்று பிரியும் அளவுக்கு வந்து விட்டதாகவும் சபிதா ஜோசப் கூறியிருக்கிறார். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

அதிர்ச்சியை கிளப்பிய ஜெயம் ரவியின் விவாகரத்து

- Advertisement -spot_img

Trending News