Ilayaraja: பேக்கிரிய டெவெலப் பணத்துல இருந்து பண்ண குடு, ரொட்டிய குடுன்னு தொந்தரவு பண்றாங்கன்னு’ வடிவேலு ஒரு காமெடியில் சொல்வாரு. அப்படி தான் இப்போ இளையராஜா பயோபிக் பட நிலைமை இருக்கும். இந்த படத்துல வைரமுத்து கத வருமா, கங்கை அமரன் பற்றி வருமான்னு ஆயிரம் கேள்வி.
படம் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே இளையராஜா பத்தி தெரியாத நிறைய விஷயங்கள் வெளிய வந்துட்டு இருக்கு. நிறைய பிரபலங்கள் அவர பத்தி பேட்டி கொடுத்துட்டு இருக்காங்க.அதுல ‘வலைப்பேச்சு’ அந்தணன் பேசியிருக்கும் விஷயம் இப்போ வைரல் ஆகிட்டு இருக்கு.
இளையராஜா பயோபிக் எப்படி இருக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்புக்கு அந்தணன் அதில் பதில் சொல்லியிருக்காரு. இளையராஜா பண்ணைபுரத்தில் இருந்து வந்து கஷ்டப்பட்டு, அவரோட முதல் பாட்டு ஹிட் ஆகுறதோட அந்த படம் முடிய வாய்ப்பு இருக்குனு ஒரு கணிப்பு சொல்லியிருக்காரு.
பயோபிக் படம் என்பது 200 வருஷம் கூட கழிச்சு பாக்க போற விஷயம். அதனால் அதில் இளையராஜா பற்றிய சர்ச்சை ஏதும் இருக்காதுன்னு அந்தணன் சொல்லியிருக்காரு. படத்துல சர்ச்சை இருக்காதுன்னு சொல்லிட்டு, அந்தணன் அவர் பேட்டியில் பெரிய சர்ச்சை கிளப்பி இருக்காரு.
இளையராஜாவுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக ஒரே போடாக போட்டுவிட்டார் அந்தணன். இளையராஜா தனக்கு நெருக்கமான நடிகர்களுடனும், அவருடைய நண்பர் பாரதிராஜா உடனும் பார்ட்டிக்கு செல்வதையும் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
ஆன்மீகத்திற்கு பின்னால் இருந்த ரௌடிசம்
ஒருமுறை ரஜினியின் படம் ஒன்று பெரிய அளவில் ஹிட் அடித்ததற்கு அவர் பாரதிராஜா மற்றும் இளையராஜாவுக்கு பார்ட்டி வைத்திருக்கிறார். அவங்க 2 பெரும் ரஜினிக்கு முன்னாலேயே அந்த இடத்திற்கு போயிட்டாங்களாம். பாரதிராஜா அதிகமாக குடித்து இருக்கிறார்.
அப்போ ரஜினி லேட்டா வந்து இருக்கிறார். உடனே பாரதிராஜா ஏன் லேட்டா வந்தன்னு கேட்டு ரஜினியை அடித்து இருக்கிறார். அந்த இடத்தில பெரிய பிரச்சனையே வெடிச்சு இருக்கு. அந்த சம்பவத்தில் இருந்து தான் இனி குடிக்கவே கூடாதுனு முடிவு எடுத்து இருக்கிறார் இசைஞானி.