தோனிக்காக காத்திருந்த விஜய், நோ சொன்ன கேப்டன் கூல்.. VP கோட் படத்தின் ஸ்க்ரிப்டை மாற்றிய காரணம்

GOAT: தளபதி விஜய் நடித்த கோட் படம் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கடந்த ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆனது. வழக்கமான விஜய் படம் போல பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் இந்த படத்திற்கும் சரிசமமாக கிடைத்திருக்கிறது.

தளபதி ரசிகர்கள் ஒரு பக்கம் இந்த படத்தை பெரிய அளவில் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. கோட் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியின் போது ஒரே நேரத்தில் அஜித் மற்றும் மகேந்திர சிங் தோனியின் ரெபரன்ஸ் வந்திருக்கும்.

நோ சொன்ன கேப்டன் கூல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன் அணி ஐபிஎல் மேட்ச் விளையாடும் விளையாட்டு மைதானத்தில் ஹீரோ மற்றும் வில்லனுக்கு இடையே நடக்கும் சண்டை காட்சி தான் அது. இதில் தோனி விளையாடும் கிரிக்கெட் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

ஆரம்பத்தில் இந்த காட்சியை வேற மாதிரி எழுதி அதன் பின்னர் வெங்கட் பிரபு மாற்றி இருக்கிறார். முதலில் மேட்ச் விளையாடுவதற்கு முன் விஜய் தோனியை சந்தித்து வாழ்த்து சொல்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக வெங்கட் பிரபு தோனியை அணுகி இருக்கிறார். பலமுறை இதற்கான முயற்சியும் நடந்திருக்கிறது. விஜய்யும் அவ்வப்போது வெங்கட் பிரபுவுக்கு போன் பண்ணி தோனி என்ன சொன்னார் என கேட்டுக் கொண்டே இருந்தாராம்.

விஜய்க்கு மகேந்திர சிங் தோனியுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்திருக்கிறது. ஆனால் தோனிக்கு அடுத்தடுத்து கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள் இருந்ததால் அவரால் கால் சீட் கொடுக்க முடியவில்லை. அதன் பின்னர்தான் வெங்கட் பிரபு அந்த காட்சியை மாற்றி இருக்கிறார்.

கோட் படம் வென்றதா?

- Advertisement -spot_img

Trending News