புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விஜய் டிவியின் டிஆர்பி ஆட்டத்தில் பகடைக்காயாக சச்சனா.. VJS மாட்டிக் கொண்டாரா இல்லை துணை போகிறாரா?

Bigg Boss: மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆரம்பமாகிவிட்டது. ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற அடிப்படையான நாதத்தை வைத்து தான் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு வருஷமும் வெற்றி வாகை சூடி வருகிறது.

எந்த அளவுக்கு சண்டை வருகிறது அந்த அளவுக்கு அந்த வாரம் டிஆர்பி அதிகமாக இருக்கும். விஜய் டிவியை பற்றி சொல்லவே வேண்டாம் டிஆர்பிஐ ஏற்ற வேண்டும் என முடிவெடுத்து விட்டார்கள் என்றால் எந்த லெவலுக்கும் போவார்கள்.

இதுவரை பிக் பாஸ் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளரை வெளியேற்றி இருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படத்தில் அவருக்கு மகளாக நடித்த சச்சனா இந்த சீசனில் கலந்து கொண்டார்.

உன்னை யார் இங்க வர சொன்னது என விஜய் சேதுபதி உரிமையுடன் கேட்டது பார்ப்பதற்கு கொள்ளை அழகாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் சச்சனாவின் இயல்பான பேச்சு, தன்னுடைய அணிக்காக முன் வந்து நின்று பேசுவது என மக்களை ஓரளவுக்கு கவர தொடங்கினார்.

சச்சனாவின் இந்த முதல் எலிமினேஷன் யாராலுமே தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதற்கு முழு காரணமும் விஜய் சேதுபதி தான் என்பது போல் ஒரு கதை உருவாகிக் கொண்டிருக்கிறது. அதாவது விஜய் சேதுபதி சச்சனாவுக்கு அப்பாவாக நடித்ததால், அவரை தன் மகள் போலவே கருதுகிறார்.

இனி சச்சனாவுக்கு ஆதரவாக அவர் பேசினால் விஜய் சேதுபதி பேவரிட்சம் பண்ணுகிறார் என பேச்சு வந்துவிடும். மற்ற போட்டியாளர்களை கையாள்வது போல் சச்சனாவை அவரால் கையாள முடியாது. இதனால் தான் விஜய் சேதுபதியே சச்சனாவை வெளியே அனுப்பி விட்டார் என சொல்கிறார்கள்.

VJS மாட்டிக் கொண்டாரா இல்லை துணை போகிறாரா?

அதுமட்டுமில்லாமல் முதல் நாளே விஜய் சேதுபதியின் ரெக்கமண்டேஷனில் உள்ளே வந்த சச்சனாவை வெளியில் அனுப்பி விஜய் டிவி டிஆர்பி தேடிக் கொண்டது என்றும் சொல்கிறார்கள். சச்சனாவின் இந்த எலிமினேஷனில் நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் இருப்பதால் இது மொத்தமும் விஜய் சேதுபதிக்கு நெகட்டிவாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் உண்மையில் சச்சனா உள்ளே வரப்போகிறார் என்பது விஜய் சேதுபதிக்கு தெரியாமலேயா இருந்திருக்கும். இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று அவர் நினைத்து அப்போதே வேண்டாம், அவரை எடுக்காதீர்கள் என்று சொல்லி இருக்கலாம்.

அது மட்டும் இல்லாமல் விஜய் சேதுபதி அனுமதி இல்லாமல் சச்சனாவை வெளியில் அனுப்பி இருந்தால் கண்டிப்பாக விஜய் சேதுபதி தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து இருப்பார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சம்பளம் வாங்கிக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பிறகு அந்த நிகழ்ச்சி சொல்வதை தான் நாம் கேட்க வேண்டும் என்பது காலம் காலமாக எழுதப்பட்ட விதி.

விஜய் சேதுபதி மற்ற போட்டியாளர்களிடமும் பேசிய சில விஷயங்கள் பெரிய அளவில் பாராட்டை பெற்று வருகிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் காதில் ஒரு மைக் மாட்டியிருக்கிறார். இயக்குனர் குழு அங்கு இருந்து கொடுக்கும் துணுக்குகளை தான் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் பேசுவார்.

இது எல்லா நிகழ்ச்சியிலும் நடக்கும் ஒன்றுதான். அப்படி இருக்கும் பொழுது இயக்குனர் குழுவைத் தாண்டி விஜய் சேதுபதி ஒரு வார்த்தை கூட பேச இருக்க வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும்போது இது ஒரு முழுக்க முழுக்க ரியாலிட்டி ஷோ.

இயக்குனர்களால் இயக்கப்படும் நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் அவர்கள் சொல்வதை கேட்டு தான் பேசுவார்கள். இதைத் தாண்டி விஜய் சேதுபதி பெரிய ஹீரோ என்பதால் அவருடைய கருத்துக்கு அங்கு மரியாதை இருக்கும் அவ்வளவுதான்.

அதை தாண்டி எனக்கு மகள் போல நடித்த பெண் அவரை வீக் என்டில் என்னால் கடிந்து கொள்ள முடியாது, அதனால் வெளிய அனுப்புங்கள் என்றெல்லாம் அவர் சொல்ல முடியாது. உண்மையை சொல்லப்போனால் விஜய் டிவியின் டிஆர்பி பகடை ஆட்டத்தில் விஜய் சேதுபதி மாட்டிகொண்டாரா, இல்லை அந்த டிஆர்பிக்கு துணை போகிறாரா என்பதை மட்டும் தான் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

முதல் நாளிலேயே ரணகளமாக ஆரம்பித்த பிக் பாஸ்

- Advertisement -

Trending News