செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

தனுஷ் சும்மா ஊறுகா தான், நயன் டார்கெட் வேற.. இந்தம்மா பெரிய ஆளா இருக்கும் போலயே!

Nayanthara: நயன்தாரா மற்றும் தனுஷுக்கு இடையேயான பிரச்சனை சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்தது மாதிரி ஆகிவிட்டது. எந்த பக்கம் திரும்பினாலும் தனுசுக்கு ஆதரவு கொடுப்பவர்கள், நயன்தாராவுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் என பிரிந்து வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பெரிய நியூஸ் சேனலிலேயே யார் பக்கம் தப்பு இருக்கு என பத்து பேர் உட்கார்ந்து பஞ்சாயத்து வைக்கும் அளவுக்கு பிரச்சனை பெருசாகி விட்டது. இந்த நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி தன்னுடைய கருத்தை அள்ளித் தெளித்திருக்கிறார்.

நயன்தாரா தனுஷிடம் பஞ்சாயத்து பண்ணுவதெல்லாம் அவரை டார்கெட் பண்ணுவதற்காக இல்லையாம். நயன்தாராவின் டாக்குமென்ட்ரி படம் நவம்பர் 18ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இரண்டு மாதங்களுக்கு முன்பே செய்தி வெளியானது.

இந்தம்மா பெரிய ஆளா இருக்கும் போலயே!

ஆனால் மக்களிடையே எந்த எதிர்பார்ப்பும் ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து கடந்த வாரம் டீசர் வெளியானது, அதையும் கண்டு கொள்ள ஆள் இல்லை. இப்படியே போனால் கல்லா கட்ட முடியாது என நயன்தாராவுக்கு தெரிந்து விட்டது.

அதனால் தான் ரிலீஸுக்கு இரண்டு நாளுக்கு முன்னாடி சுதாரித்துக் கொண்டு டாக்குமென்ட்ரி படத்திற்கான விளம்பரத்தை தொடங்கியிருக்கிறார் என பிஸ்மி சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இரண்டு வருடங்களாக NOC கேட்டு அலைந்து கொண்டிருப்பவர்கள் அப்போவே இந்த பிரச்சனையை பற்றி பேசி இருக்கலாமே.

வம்படியாக அந்த மூன்று செகண்ட் வீடியோவை வைத்துவிட்டு தனுஷ் எங்களை கஷ்டப்படுத்துகிறார் என எதற்காக பேச வேண்டும், எல்லாம் பிசினஸ்க்காக தான் என பிஸ்மி கூறி இருக்கிறார்.

- Advertisement -

Trending News