புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நயன் மயக்கத்தில் தனுஷுக்கு விக்கி செஞ்ச துரோகம்.. பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்ட அந்த டூயட் பாட்டு!

Nayanthara: நயன்தாரா தனுஷ் பஞ்சாயத்து கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. நானும் ரவுடிதான் படத்தின் பாட்டுக்களையும், சில காட்சிகளையும் நயன்தாரா தன்னுடைய டாக்குமென்ட்ரி படத்தில் உபயோகிக்க ஆசைப்படுகிறார்.

ஆனால் அதற்கு தயாரிப்பாளராக தனுஷ் NOC தர மறுக்கிறார். இதுதான் நமக்குத் தெரிந்தவரை நடந்து கொண்டிருக்கும் விஷயம். ஆனால் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை எங்கே ஆரம்பித்தது என்றால் 2014 வருஷத்தில். அதாவது நானும் ரௌடி தான் படப்பிடிப்பு சமயத்தில்.

தனுஷுக்கு விக்கி செஞ்ச துரோகம்

நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிப்பது பிடிக்காததால் தான் தனுஷ் கோபமானார் என்று கூட சமூக வலைதளத்தில் சில செய்திகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல, தன் மீது நம்பிக்கை வைத்து பட வாய்ப்பு கொடுத்த தனுஷை விக்னேஷ் சிவன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பதுதான்.

படப்பிடிப்பு சமயத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருந்திருக்கிறது. அதன்பின்னர் தன்னுடைய போர்ஷன் முடிந்ததும் நயன்தாரா கேரளாவுக்கு கிளம்பி விட்டார்.

அதன்பின்னர் இவர்களுக்குள் ஆழமான காதல் உருவாகி இருக்கிறது, விக்னேஷ் சிவனை நயன்தாரா நேரில் சந்திக்க விரும்பியதும், அதற்கு விக்னேஷ் சிவன் தயங்கியதையும் டாக்குமென்டரி வீடியோவில் இருவருமே சொல்லி இருப்பார்கள்.

நயன்தாராவை பிரிய முடியாமல் தான் விக்னேஷ் சிவன் படப்பிடிப்பை ரொம்ப காலதாமதமாக முடித்ததாகவும், இதனால் தனுஷுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நானும் ரவுடிதான் படத்திற்காக ஒரு டூயட் பாடலை வெளிநாட்டில் எடுக்க வேண்டும் என்று விக்னேஷ் சிவன் தனுஷிடம் கேட்டிருக்கிறார்.

ஆனால் அதற்கு தனுஷ் முடியவே முடியாது என மறுத்திருக்கிறார். ஏற்கனவே போட்ட பட்ஜெட்டில் பத்து கோடி அதிகம் ஆகிவிட்டது, வெளிநாடு ஷூட்டிங் எல்லாம் வேண்டாம் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம்.

இங்கிருந்து தான் இந்த பிரச்சனை துளிர் விட ஆரம்பித்திருக்கிறது. அதை தொடர்ந்து சைமா விருது விழாவில் நயன்தாரா என்னுடைய பெர்ஃபார்மன்ஸ் தனுஷுக்கு பிடிக்கவில்லை போல என மேடையில் பேசியது, விக்னேஷ் சிவன் கையால் விருது வாங்கியது என அடுத்தடுத்து பிரச்சனை பூதாகரமாகி இருக்கிறது.

- Advertisement -

Trending News