நடிகையின் அக்காவையும் விட்டு வைக்காத கும்பல்.. தயாரிப்பாளர் ரூமுக்குள் நடந்த அத்துமீறல்

Gossip: குடும்ப சூழ்நிலை காரணமாகவோ அல்லது திறமையை நிரூபிக்கவோ நடிப்பை தேர்ந்தெடுக்கும் இளம்பெண்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களை தங்களுடைய ஆசைக்கு இணங்க வைக்கும் சில மோசமான மனிதர்களும் திரைத்துறையில் இருக்கின்றனர்.

முன்பு இலை மறை காயாக இருந்த இந்த அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம் சமீபகாலமாக கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. சிலர் இதை வாய்ப்புக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளியில் சொல்லாமல் மறைத்து விடுகின்றனர்.

ஆனால் இப்போது பழைய சம்பவங்கள் கூட கிணறு வெட்ட கிளம்பிய பூதமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நான்கு எழுத்து நடிகை ஒருவருக்கு நடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகைக்கு நடந்த சம்பவம்

பப்லியாக இருக்கும் இந்த நடிகை தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால் இவர் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் இவருக்கு ஏகப்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகள் வந்திருக்கிறது.

ஒருமுறை சூட்டிங் முடிந்து இவர் திரும்பும் போது தயாரிப்பாளரிடம் சொல்லிவிட்டு செல்வதற்காக ரூமுக்கு சென்றாராம். அப்போது அவருடைய அக்காவும் உடன் இருந்திருக்கிறார். இருவரும் ரூமுக்குள் சென்றவுடன் அங்கு இருந்த கும்பல் இவர்களை பலவந்தப்படுத்தி இருக்கின்றனர்.

இந்த அதிரடி தாக்குதலில் நிலைகுலைந்து போன இருவரும் எப்படியோ அங்கிருந்து தப்பித்து வந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தை தற்போது நடிகை போட்டு உடைத்திருக்கும் நிலையில் தைரியமான நடிகை ஒருவரும் பழைய கதையை கிளறி வருவது டாப் ஹீரோக்களுக்கு பீதியை கிளப்பி இருக்கிறது.

நடிகையிடம் அத்துமீறிய முரட்டு கும்பல்

Next Story

- Advertisement -