வசூலே இல்லாவிட்டாலும் கார் வாங்கி கொடுத்த தயாரிப்பாளர்.. ஆதார் படத்துக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா

ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் வெண்ணிலா கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் ஆதார். கருணாஸ், அருண்பாண்டியன், இனியா, ரித்விகா ஆகியோரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

ஆனால் வசூல் ரீதியாக இப்படம் பெரிய அளவில் லாபத்தை பெறவில்லை. இருப்பினும் தரமான கதை என்ற பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குனருக்கு தயாரிப்பாளர் புதிய கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளாராம்.

Also read:இந்த வாரம் வெளியான 6 படங்கள்.. அழுத்தமான கதைக்களத்துடன் வந்திருக்கும் ஆதார் படம்

பொதுவாக ஒரு படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றுவிட்டால் அந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனருக்கு கார், பைக் போன்ற பரிசுகளை கொடுப்பது வழக்கம். சமீபத்தில் கூட ஐசரி கணேஷ் வெந்து தணிந்தது காடு திரைப்பட வெற்றிக்காக கௌதம் மேனனுக்கு பைக் ஒன்றை பரிசளித்திருந்தார்.

மேலும் விக்ரம் திரைப்படத்தின் வரலாறு காணாத வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு விலை மதிப்புள்ள கார் பரிசளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி வசூலில் லாபம் ஈட்டும் திரைப்பட இயக்குனர்களுக்கு தான் தயாரிப்பாளர்கள் பரிசுகளை வழங்குவார்கள்.

Also read:வெற்றிமாறனை குஷிப்படுத்திய கருணாஸ்.. மனைவியுடன் வெளியான பேமிலி போட்டோ!

ஆனால் வசூலில் பெரிய அளவில் லாபம் பெறாத ஆதார் பெற இயக்குனருக்கு தயாரிப்பாளர் ஏன் காரை பரிசளித்தார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதற்கு தயாரிப்பாளர் ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளார். என்னவென்றால் எங்கள் நிறுவனத்திற்கு ஒரு நல்ல தரமான கதையை இயக்குனர் கொடுத்துள்ளதால் தான் இந்த பரிசு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் அவர் டொயோட்டா கம்பெனியின் புது மாடல் காரை இயக்குனருக்கு பரிசளித்துள்ளார். படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தாலும் இயக்குனரின் திறமைக்காக இப்படி ஒரு பரிசு கொடுத்திருந்த தயாரிப்பாளரை தற்போது திரையுலகில் பலரும் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்த்து வருகின்றனர்.

Also read:சிம்ரனுடன் நடிக்க மறுத்த கருணாஸ்.. உங்களுக்கே இது ஓவரா தெரியல!