Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஷ்ணு விஷால் பட தயாரிப்பாளர் செய்த தில்லாலங்கடி வேலை! பல கோடியை இழந்து திக்குமுக்காடும் நடிகர் சூரி!
தமிழ் சினிமாவில் ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தின் மூலம் நமக்கெல்லாம் புரோட்டா சூரி என்ற பெயரில் பரிச்சயமானவர் தான் காமெடி நடிகர் சூரி.
இவர் 2015ல் வெளியான விஷ்ணு விஷாலின் ‘வீர தீர சூரன்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இந்த படத்திற்கான சூரியின் சம்பளம் ரூ. 40 லட்சத்தை தயாரிப்பாளர் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.
மேலும் சம்பளத்திற்கு பதிலாய் நிலம் வாங்கி தருவதாக படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலாவும் வாக்களித்துள்ளனர்.
இதை நம்பி சூரியும் சில கோடி பணத்தை நிலத்தில் முதலீடு செய்துள்ளார். ஆனால் அந்த நிலம் பல சிக்கலில் இருந்ததால் தன்னுடைய பணத்தை திரும்பக் கேட்டுள்ளார் நடிகர் சூரி.
அதன்பின் சூரியிடம் வாங்கிய பணத்தில் வெறும் ரூ.40 லட்சம் மட்டுமே கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.2.70 கோடியை திரும்பத் தராமல் இழுத்தடித்தனர்.
கொஞ்ச நாள் பொறுமையா காத்திருந்த சூரி அதன்பின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விட்டார்.
இந்த வழக்கு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது, ‘முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் மீது விசாரணை நடத்தி வழக்கு பதிய வேண்டும்’ என்று கடந்த மாதம் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
எனவே நீதிபதியின் இந்த நடவடிக்கையால், தனக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்றும் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதாகவும் சூரி தெரிவித்துள்ளார்.
