வெங்கட் பிரபுவின் தாராள மனசுக்கு வந்த சிக்கல்.. உதவி இயக்குனர்கள் வயிற்றில் அடித்த பரிதாபம்

மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இப்போது படு பிசியாக மாறி இருக்கிறார். பல முன்னணி நடிகர்களும் அவருடைய இயக்கத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது அவர் நாக சைதன்யாவை வைத்து தெலுங்கில் ஒரு திரைப்படத்தை இயக்குகிறார்.

அதில் தான் தற்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே வெங்கட் பிரபுவுக்கு ரொம்பவும் தாராள மனசு. அனைவரிடமும் கலகலப்பாக பழகக் கூடியவர். அவருடைய உதவி இயக்குனர்களிடம் வெகு இயல்பாக, ஜாலியாக எப்போதும் பேசுவாராம்.

Also read:அதிரடி ஆட்டத்திற்கு தயாரான விஜய்.. கேப்டனாக இருந்து வழிநடத்தும் வெங்கட் பிரபு

அதனாலேயே அவருடன் வேலை செய்வது அனைவருக்கும் ரொம்பவும் பிடிக்கும். அந்த வகையில் அவர் தன் உதவி இயக்குனர்களுக்கும் நல்ல சம்பளத்தையே கொடுத்து வந்தார். பல இயக்குனர்களும் தங்களிடம் அசிஸ்டெண்டாக வேலை பார்க்கும் உதவி இயக்குனர்களுக்கு தயாரிப்பாளரிடமிருந்து பணத்தை வாங்கி அளந்து தான் கொடுப்பார்கள்.

ஆனால் வெங்கட் பிரபு அவர்களில் சற்று வித்தியாசமானவர். உதவி இயக்குனர்களுக்கும் தாராளமாக சம்பளம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர். அந்த வகையில் அவர் மாநாடு திரைப்படத்தின் போது தன் உதவி இயக்குனர்கள் ஒவ்வொருவருக்கும் நாற்பதாயிரம் சம்பளமாக கொடுத்தாராம்.

Also read:லிங்குசாமியை அடுத்து விழி பிதுங்கி நிற்கும் வெங்கட்பிரபு.. 100 கோடி வசூல் எடுத்தும் இதான் நிலைமை

அதைத்தொடர்ந்து அவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் தெலுங்கு திரைப்படத்தில் அவர்களுடைய சம்பளத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்தி 65 ஆயிரமாகக் கொடுக்க திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் அவரின் திட்டம் தற்போது நிறைவேற முடியாத நிலையில் இருக்கிறது.

ஏனென்றால் தெலுங்கு திரையுலகில் சமீபத்தில் ஒரு ஸ்ட்ரைக் நடைபெற்றது. அதில் ஏகப்பட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. அதன் படி இயக்குனர்கள், ஹீரோ, ஹீரோயின் ஆகியோரின் அசிஸ்டன்டுகளுக்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து சம்பளம் கொடுக்க மாட்டோம் என்று முடிவு செய்தனர். அதனால் வெங்கட் பிரபு தன்னுடைய உதவியாளர்களுக்கு தாராளமாக சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்.

Also read:தளபதியுடன் போட்டி போட்டு தோற்ற சிம்பு.. இதுக்குதான் அப்பவே வேணான்னு சொன்னாங்க

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்