பத்து தலையால் மீண்டும் வந்த தலைவலி.. சிம்பு கையில் எடுத்த புது பிரச்சனை

சினிமாவில் மீண்டும் ஒரு மாஸ் கம்பேக் கொடுக்கவேண்டும் என காத்திருந்த நிலையில் வெங்கட் பிரபுவுடன் இணைந்து சிம்பு நடித்த மாநாடு படம் மிகப்பெரிய வெற்றி கொடுத்தது. இந்நிலையில் சிம்பு தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார்.

ஏற்கனவே கௌதம் மேனன், சிம்பு கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்நிலையில் மீண்டும் இவர்களது காம்போவில் படம் வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து சிம்பு பத்துதல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்போது பத்துதல படத்தில் சிம்புக்கு மிகப் பெரிய சிக்கல் வந்துள்ளது. மாநாடு படத்திற்குப் பிறகு சிம்புவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளதால் இந்த படத்திற்கு பேசியதை விட தற்போது அதிகம் சம்பளம் கேட்கிறார்.

சம்பளத்தை ஓரளவு ஏற்றி இருந்தால் பரவாயில்லை, ஒரேடியாக சிம்பு ஏற்றியதால் படக்குழு என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளது. இதனால் இப்படத்தில் சிம்புவின் சம்பளம் ஒரு மிகப் பெரிய பிரச்சனையாகவே இருந்து வருகிறது.

மேலும் சிம்புவுக்கும், அவர் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சினை வருவது இது முதல் முறையல்ல. இந்நிலையில் பத்துதல படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடித்துள்ளார். முதலில் கௌதம் கார்த்திக் கதாபாத்திரத்தை ஹீரோ போல் சித்தரித்து வெயிட்டான கதாபாத்திரத்தை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது சிம்பு அதிகப்படியான சம்பளம் கேட்பதாலும், அவரின் மார்க்கெட் உயர்ந்துள்ளதால் கௌதம் கார்த்திக்கிற்கு ஒரு படி மேலாக சிம்புவை காட்ட படக்குழு திட்டமிட்டு உள்ளனர். இதற்கான வேலைகள் தற்போது பத்து தல படக்குழு இறங்கியுள்ளது.

Next Story

- Advertisement -