சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

மாஸ்டர் துவங்கிய மனஸ்தாபம் வாரிசு வரை நீடிக்கிறது.. இந்த பிரச்சினைக்கு முடிவே இல்லையா

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக விளங்கும் தளபதி விஜய் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இவருடைய படங்கள் என்றால் திரையரங்கில் திருவிழா போல் அவருடைய ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். இந்த அளவுக்கு விஜய் உயர்வதற்கு முக்கிய காரணமாக அவருடைய உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அவருடைய தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரும் முக்கிய காரணம்.

ஏனென்றால் அவருடைய இயக்கத்தில் தான் ஆரம்ப காலத்தில் விஜய் தட்டுத்தடுமாறி நடித்து, ஏறத்தாள 10 படங்களுக்கு பிறகுதான் தளபதி விஜய் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் வகுத்தார். இன்னிலையில் தளபதி விஜய்க்கும், எஸ்ஏ சந்திரசேகருக்கும் கடந்த சில ஆண்டுகளாக மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து இருக்கின்றனர்.

இதற்கு காரணம் என்னவென்றால், தளபதி விஜய்யின் அரசியலில் அவருடைய தந்தையின் குறுக்கீடு இருந்ததால், அதை விரும்பாத விஜய் அதன் பிறகு தந்தையின் செயல்பாடுகள் பிடிக்காததால் விலகி இருக்கிறார். கடைசியாக மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் விஜய் தனது பெற்றோருடன் கலந்து கொண்டார். அதன் பிறகு எஸ்ஏசி மற்றும் விஜய்யை ஒன்றாக எங்கேயும் பார்க்கமுடியவில்லை.

இந்நிலையில் எஸ்ஏசி தனது 81-வது பிறந்தநாளை தளபதி விஜய் இல்லாமல் தன்னுடைய மனைவி ஷோபா உடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவுகிறது. பிறந்தநாளுக்கு வெட்டப்பட்ட கேக் கொஞ்சம் வித்யாசமாக அவர் இயக்கிய படங்களில் பெயரின் பிறந்தநாள் கேக் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவருடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அவருடைய வாரிசு விஜய் வராததால் எஸ்ஏசி மற்றும் விஜய் இருவருக்கும் இடையே இருக்கும் மனஸ்தாபம் இன்னும் சரியாகவில்லை என தெரிகிறது. கூடிய விரைவில் இவர்களுக்கு இடையே இருக்கும் விரிசல் சரியாக வேண்டுமென கோலிவுட் பிரபலங்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் விரும்புகின்றனர்.

தற்சமயம் தளபதி விஜய் பீஸ்ட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து தன்னுடைய 67-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். எனவே சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் தளபதி விஜய் தன்னுடைய குடும்பத்தினரிடமும் நேரம் செலவழித்து அவர்களிடம் இருக்கும் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.

SAC-cinemapettai
SAC-cinemapettai
- Advertisement -

Trending News