தளபதி விஜய் நடிக்கும் படங்களின் சாட்டிலைட் உரிமையை உரிமையை வாங்க தொலைக்காட்சிகளுக்கிடையே போட்டி நடப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. விஜய் படத்தை ஒளிபரப்பினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அவரை அவருக்கு இருக்கும் ரசிகர்களை ஈர்த்துவிடலாம் என்பதால் தான் அப்படி.

தற்போது விஜய் நடித்துவரும் மெர்சல் படத்தின் உரிமையை Zee டிவி 30 கோடி ருபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே தொலைக்காட்சி சில மாதங்கள் முன்பு ரஜினி நடித்துவரும் 2.0 படத்தின் உரிமையை 110 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அட்லீ இயக்கும் இந்த படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர்