Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கண்ணனை கண்டுபிடித்தாச்சு என்று போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கதிருக்கு போன் வருகிறது. அதன்படி ராஜியை கூட்டிட்டு கதிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார். போலீஸ் ஸ்டேஷனுக்கு போன ராஜி கண்ணனை பார்த்ததும் ஆவேசத்தில் சட்டையை பிடித்து அடிக்கிறார். பிறகு போலீஸ், ராஜியை தடுத்து விசாரணை பண்ணுகிறார்கள்.
அப்பொழுது கதிர், நானும் ராஜியும் காதலித்தோம். நாங்கள் திருமணம் செய்து கொள்வதால் ராஜியை அவருடைய வீட்டிலிருந்து கூட்டிட்டு வரும் பொறுப்பை கண்ணனிடம் ஒப்படைத்தேன். அவன் கூட்டிட்டு வரும்போது நகை பணத்தை திருடிட்டு போய் விட்டான் என்று ராஜி மீது தவறு இல்லாத போல் கதிர் மாத்தி பேசி விட்டார். பிறகு போலீஸ் அந்த கண்ணனிடம் இப்பொழுது பணம் இல்லை.
அதனால் அவனிடம் ஏதாவது சொத்து இருந்தால் அதன் மூலம் உங்களுடைய நகைக்கான பணத்தை திருப்பிக் கொடுக்க சொல்கிறேன் என்று போலீஸ் கூறிவிட்டது. உடனே வீட்டிற்கு திரும்பிய ராஜி மற்றும் கதிர் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி போகிறார்கள். அடுத்ததாக மீனா மற்றும் ராஜி இந்த விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்பொழுது திடீரென்று போலீஸ் ஜீப்பு வந்து விட்டதால் இருவரும் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். அதாவது கண்ணன் பிரச்சினையை வீட்டில் சொல்வதற்காக தான் வந்திருக்கிறார்கள் என்ற பயத்தில் வந்த போலீஸிடம் உளறுகிறார்கள். ஆனால் அவர்கள் அதற்காக வராமல் வீட்டிற்குள் போய் கதிரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போக வந்திருப்பதாக சொல்கிறார்கள்.
அதுவும் பொண்ணை கடத்திய விஷயத்துக்கு கதிரை நாங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போகிறோம் என்று அடாவடியாக வீட்டிற்குள் நுழைந்து கூட்டிட்டு போய் விடுகிறார்கள். இதனை பார்த்த பாண்டியன் என் மகன் அப்படிப்பட்ட ஆளு கிடையாது என்று பாசத்தை கொட்டும் விதமாக கதிருக்காக போலீஸிடம் வாக்குவாதம் பண்ணுகிறார்.
ஆனால் போலீஸ் எதுவும் கேட்காத நிலையில் கதிரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விடுகிறார்கள். பிறகு பின்னாடியே பாண்டியன், செந்தில் மற்றும் சரவணன் இருவரும் சேர்ந்து போகிறார்கள். போலீஸ் ஸ்டேஷன் போன கதிரை முட்டிப்போட்டு கைதி போல் உட்கார சொல்லிவிட்டார்கள். இதனை பார்த்த பாண்டியன் என் மகன் யாரையும் கடத்திருக்க மாட்டான் என்று சொல்கிறார்.
ஆனால் அங்கே கம்ப்ளைன்ட் கொடுத்த பெண்ணோட அப்பா இவன்தான் என் மகளை கூட்டிட்டு போனான் திருப்பி கூட்டிட்டு வந்து விடவில்லை என்று மொத்த பழியையும் கதிர் மீது போடுகிறார். ஆனால் கதிர் நான் வீட்டு வாசலில் வந்து விட்டு விட்டேன் என்று சொல்கிறார். அத்துடன் நடந்து உண்மையும் சொல்கிறேன் என்று சொல்லி நிலையில் யாரும் காது கொடுத்து கேட்காமல் கதிரை ஒரு குற்றவாளி போல் நடத்துகிறார்கள்.
அந்த வகையில் கதிர் மீது எந்த தவறும் இல்லை என்று ராஜிக்கும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் நன்றாகவே தெரியும். அதனால் தற்போது கதிர் மீது விழுந்திருக்கும் பழியை போக்க வேண்டும் என்பதற்காக ராஜி உண்மை தெரிந்து கொள்ள போராட போகிறார்.