vijay

கேளிக்கை வரியை நீக்கும் வரை புதிய படங்களை வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளதால் தீபாவளிக்கு திட்டமிட்டப்படி மெர்சல் படம் வெளியாகுமா என்பது கேள்வி குறியாக உள்ளது.

இந்நிலையில் வரியை நீக்குவது குறித்து திரைப்படத்துறையினர் நேற்று அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஓரிரு நாளில் முதல்வரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

திரைப்படத்துறைக்கு 10 சதவீதம் கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்துள்ளது. இதை எதிர்த்து திரைப்படத்துறையினர் போராடி வருகின்றனர். கேளிக்கை வரியை நீக்கும் வரை புதிய படங்கள் வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

mersal

இதனால் கடந்த வாரம் எந்த படமும் வெளியாகவில்லை. இந்த வாரமும் எந்த படமும் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேளிக்கை வரியை நீக்குவது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன், விநியோகஸ்தகர் சங்கத்தின் தலைவர் அருள்பதி உள்ளிட்ட குழுவினர் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி ஆகியோரை சந்தித்து பேசினர்.

அதிகம் படித்தவை:  இந்த டைட்டில் வைத்தால் பிரச்சனை வருமோ ? பின்வாங்கிய விஜய்

அப்போது கேளிக்கை வரியை முழுமையாக நீக்க வேண்டும் என அவர்கள் அமைச்சரிடம் வலியுறுத்தினர். இருப்பினும் முதல்சுற்று பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவெடுப்பதாக தெரிவித்தனர்.

mersal peace bro

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், எங்கள் கோரிக்கைகளை அமைச்சர்களை சந்தித்து தெரிவித்துள்ளோம். ஓரிருநாளில் முதல்வரை சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளோம்.

விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றார். கேளிக்கை வரியை நீக்கும் வரை புதிய படங்களை வெளியிடுவதில்லை என்ற முடிவால் திட்டமிட்டப்படி தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருப்பினும் அதற்குள் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு எட்டப்படும் என சினிமாத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

mersal-vijay

இதற்கிடையில் தீபாவளியை வேறலெவலில் கொண்டாட விஜய் ரசிகர்கள் பக்கா பிளான் போட்டு வருகின்றனர். படம் வருமா வராதா என்ற பயத்தை போக்கி படத்தை பிரம்மாண்டமாக வரவேற்க தயாராகி விட்டனர்.

இந்த நிலையில் பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கின் நிர்வாக இயக்குனர் ரேவந்த் சரண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார்.

அதிகம் படித்தவை:  விஜய்கூட நடிக்காமல் என் உயிர் போகிறது! சொன்னது எந்த நடிகை தெரியுமா?

அதில், என்ன ஒரு ஸ்பெஷலான தினம், விஜய்யை சந்தித்த நாள். ரசிகர்கள் தான் என் பலத்திற்க்கான தூண்கள். அவர்களின் மகிழ்ச்சிக்காகவும், அளவில்லாத அன்பிற்காகவும் தான் நான் வியர்வை சிந்தி உழைக்கிறேன்” என்று விஜய் கூறியதாக பதிவு செய்துள்ளார்.