முதல் 6 இடத்தை பிடித்த டாப் ஹீரோக்கள்.. தட்டு தடுமாறி கடைசி இடத்தைப் பிடித்த சிம்பு

சமூக வலைத்தளங்கள் பெருகி விட்ட இந்த காலகட்டத்தில் சினிமா சம்பந்தப்பட்ட எந்த விஷயமாக இருந்தாலும் அது உடனுக்குடன் ரசிகர்களை சென்றடைந்து விடுகிறது. அதிலும் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட பிரபல நடிகர்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமான பாலோவர்ஸ் இருக்கிறார்கள்.

தற்போது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாவில் தான் ரசிகர்கள் பெரும்பாலும் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர். அதில் தென்னிந்தியாவின் பிரபல நடிகர்களை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை பற்றி காண்போம்.

அல்லு அர்ஜுன்: தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் இவர் புஷ்பா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் அதிக அளவில் கவர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படம் பல கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. இவரை இன்ஸ்டாகிராமில் 17.5 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். அந்த வகையில் இவர் முதல் இடத்தில் இருக்கிறார்.

விஜய் தேவரகொண்டா: தெலுங்கு திரையுலகில் இளம் நாயகனாக வலம் வரும் இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருக்கின்றனர். அந்த வகையில் இவரை இன்ஸ்டாகிராமில் 14.7 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

துல்கர் சல்மான்: மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனான இவர் தற்போது முன்னணி நடிகராக இருக்கிறார். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருக்கும் இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். இவரை இன்ஸ்டாகிராமில் 10.1 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்வதால் இவர் மூன்றாமிடத்தில் இருக்கிறார்.

பிரபாஸ்: பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த இவர் தற்போது உலக அளவில் பிரபலமாக இருக்கிறார். இவரின் நடிப்பில் தற்போது ராதேஷ்யாம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவரை இன்ஸ்டாகிராமில் 8.1 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

மகேஷ் பாபு: தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் இவர் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர். பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து தற்போது பிஸியாக இருக்கும் இவரை 8 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர்.

சிம்பு: தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர் பட்டியலில் இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் தற்போது இவரின் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தால் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இவரை 6.6 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர்.

Next Story

- Advertisement -