சென்னை, மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்பட்ட இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளது. இரு இடங்களிலும் மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் காவல் நிலையம் மீது தீ வைக்கப்பட்ட மற்றும் காவலர்கள் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் பெரிதும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வன்முறைகள் நடக்காத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நடிகர் ராகவா லாரன்ஸ், ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த கிரிக்கெட் வீரர் சேவாக் தமிழ்நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து சேவாக் கூறும்போது ” தமிழ்நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தங்களது அறவழிப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தை வைத்து சுயநலன்கள் ஆதாயம் அடையம் அனுமதித்து விடாதீர்கள்” என்று கூறியிருக்கிறார்.