நடிகர் தனுஷ் தங்கள் மகன் என சிவகங்கை தம்பதிகள் சொந்தம் கொண்டாடிய விடயத்தை என்னிடம் மற்றவர்கள் கூறும்போது அதிக வலியை சுமந்தேன் என அவரின் தாய் விஜயலட்சுமி கூறியுள்ளார்.

பிரபல நடிகர் தனுஷ் தங்களின் மகன் என கூறி மேலூரை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதிகள் சில மாதங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

பல்வேறு திருப்பங்களை சந்தித்த இந்த வழக்கை ரத்து செய்வதாக மதுரை உயர்நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது பேசியுள்ள தனுஷின் அம்மா விஜயலட்சுமி, என் பிள்ளையை மற்றவர்கள் சொந்தம் கொண்டிய வேதனையை கடந்த எட்டு மாதமாக அனுபவித்தேன்.

இது பற்றி என்னிடம் யாராவது என்னிடம் கேட்டால் என் வயிறு கலங்கும், எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்.

அந்த நம்பிக்கையால் இன்று உண்மை ஜெயித்து விட்டது என கூறியுள்ளார்.