பாஜக உள்ளே தமிழிசைக்கு எதிர்ப்பு! களைகட்டும் மெர்சல் விவகாரம்.. - Cinemapettai
Connect with us

Cinemapettai

பாஜக உள்ளே தமிழிசைக்கு எதிர்ப்பு! களைகட்டும் மெர்சல் விவகாரம்..

News | செய்திகள்

பாஜக உள்ளே தமிழிசைக்கு எதிர்ப்பு! களைகட்டும் மெர்சல் விவகாரம்..

பாஜக தலைவர் தமிழிசை மெர்சல் பற்றி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.விஜய்யின் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்து வரும் வசனத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த வசனத்தை படத்தில் இருந்து நீக்குமாறும் கூறியுள்ளார்.

mersal movie review

mersal vijay

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி பற்றியும் பணமில்லா பரிவர்தனை பற்றியும் கோயில்கள் பற்றிய தவறான புரிதலை ஏற்படுத்தும் கருத்துகள் பதிய வைத்திருப்பது ஏற்புடையது அல்ல என்று ட்வீட்டினார் தமிழிசை.

டிவிட்டரில் அரசியல் செய்ய முடியாது, களத்தில் இறங்கி அரசியல் செய்ய வேண்டும் என்று தமிழிசை இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதை பார்த்த நடிகை காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக நிர்வாகியாக இருந்தும் கூட காயத்ரி தமிழிசைக்கு எதிராக ட்வீட்டியுள்ளார். இது வெறும் படம் தான். நடிகர்கள் வசனம் எழுதுவது இல்லை. அனைவருக்கும் கருத்து உண்டு. நாம் நடிகரை குறை சொல்ல வேண்டாம். படம் சென்சாரில் சான்று வாங்கியுள்ளது என்று ட்வீட்டியுள்ளார் காயத்ரி.

mersal

சினிமா, அரசியல் கட்சிகள் விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறது. பொழுதுபோக்கை பொழுதுபோக்காக பார்ப்போம். அதை நிஜ வாழ்க்கையில் அப்ளை செய்ய வேண்டாம் என்கிறார் காயத்ரி.

gayathri raguram

gayathri raguram

வாழ்க்கை உன்னை வீரனாக்க ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும்..????தட் பாகுபலி2 மொமென்ட் ? என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

போலி docter பத்தி சொல்லிற்க்கங்கல…பயமா இருக்கு மா இல்லையா….பயமா தான இருக்கும்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top