7 பாட்டும் சூப்பர் ஹிட்டான ஒரே படம்.. இன்று வரை முறியடிக்கப்படாத இளையராஜாவின் சாதனை

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவை தனது இசையால் கட்டிப் போட்டவர் தான் இசைஞானி இளையராஜா. அன்றைய காலகட்டங்களில் இவருடைய இசைக்கு என்றே தனி ரசிகர் கூட்டமே இருந்தது. அந்த அளவிற்கு இவருடைய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி பட்டி தொட்டி எங்கும் பரவியது. அப்படியாக இவர் இசையில் வெளிவந்த அந்த ஏழு பாடல்களும் ஒரே படத்தில் இடம் பிடித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது

அதிலும் இவர் பல வியப்புகளை தருவதில் வல்லமை படைத்தவராக திகழ்ந்து வந்தார். மேலும் இன்றுவரையிலும் கூட இசையில் இவரை அடிச்சுக்க ஆளே என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு தனது இசையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார் என்றே சொல்லலாம். அதிலும் இவரின் பாடல்களுக்காகவே இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார் ராஜ்கிரண்.

Also Read: இளையராஜா இல்லாமல் ஹிட் கொடுத்த 5 இயக்குனர்கள்.. சுத்தமாகவே கண்டு கொள்ளாத ஷங்கர்

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் மிகவும் பிரபலமானவராக திகழ்பவர் தான் நடிகர் ராஜ்கிரண். இவரது இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அரண்மனைக்கிளி. இந்த படத்தை ராஜ்கிரனே நடித்து, இயக்கி, தயாரித்தும் இருந்தார். அதிலும் இப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை இரண்டே மணி நேரத்தில் கம்போஸ் செய்து அசத்தி விட்டார் இளையராஜா.

மேலும் இந்தப் படத்திற்கு இவர் தான் இசையமைக்க வேண்டும் என்று  விடாப்பிடியாக இருந்து வந்தனர். படத்தின் இயக்குனராக இருக்கக்கூடிய மாரிமுத்து மற்றும் ராஜ்கிரண் என இருவரும் உறுதியுடன் இருந்து தங்களது விருப்பத்தினை நிறைவேற்றிக் கொண்டனர்.  இந்நிலையில் படத்தின் சுவாரஸ்யத்தினை இளையராஜாவிடம் கூறி இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து இரண்டே மணி நேரத்தில் ஏழு பாடல்களுக்கும்  இசையமைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Also Read: ராஜ்கிரணை மிஞ்சும் அளவிற்கு கிடா விருந்து வெளுத்துக்கட்டும் நடிகர்.. மிலிட்டரி காரர் ரொம்ப மோசம்!

இவர் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அரண்மனை கிளி படத்தில் இயக்குனராகவும் அறிமுகமானார். இப்படத்தில் ராஜ்கிரண் உடன் அஹானா, வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை படைத்தது. 

அதிலும் இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்ட அடித்ததோடு மட்டுமல்லாமல் பட்டிதொட்டி எங்கும் பரவியது. இன்று வரையிலும் இசையின் அரசனாக திகழ்ந்து வரும் இளையராஜாவின் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் இவரின் சாதனையை முறியடிக்க இன்றளவும் எந்த ஒரு இசையமைப்பாளர்களும் இல்லை என்பதை நிதர்சனமான உண்மை.

Also Read: சூட்டிங் ஸ்பாட்டில் ராஜ்கிரணை அப்பா போல் தாங்கும் நடிகர்.. நீங்களே அதை சொன்னாலும் நம்புற மாதிரி இல்ல!

- Advertisement -spot_img

Trending News