புதன்கிழமை, நவம்பர் 13, 2024

10 வாரங்களாக தொடர்ந்து நாமினேட் செய்யப்படும் ஒரே நபர்.. அலேக்காக காப்பாற்றும் ஆர்மி!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டு தற்போது 94வது நாளில் ஏழு போட்டியாளர்களுடன் சுவாரசியமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்னும் சில நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும்.

ஆகையால் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ராஜு, நிரூப், பிரியங்கா, பாவனி, அமீர், சிபி, தாமரைச்செல்வி ஆகிய 7 பேருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி கொண்டிருக்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சி துவங்கப்பட்ட முதல் நாளிலிருந்து தற்போது வரை தொடர்ந்த 10 வாரங்களாக பாவனி மட்டும் நாமினேட் செய்யப் பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் தன்னுடைய வேலையை சகஜமாக பார்த்துக்கொண்டிருக்கிறார். இத்துடன் பாவனிக்கு துளிக்கூட நாமினேஷன் கண்டு பயமில்லை. பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாள் முதலே அவருக்கென்று தனி ஆர்மி உருவாகி இணையத்தில் தாறுமாறாக பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

ஆகையால் அவர்களது உறுதுணையில் பாவனி 10 வாரங்கள் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு கொண்டிருக்கிறார். பொதுவாக ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு போட்டியாளர்களை ரசிகர்களுக்கு பிடித்து விடும். அந்தவகையில் முதல் சீசனில் ஓவியா முதல் கடைசி சீசன் ஆரி அர்ஜுனன் வரை ரசிகர்கள் ஆர்மி உருவாக்கி தங்களது முழு சப்போர்ட்டை கொடுத்து வருவார்கள்.

அந்த வகையில் இந்த சீசனில் பாவனிக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஏனென்றால் திருமண வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்து கொண்டு சோகம் அடைந்த பவானி, அதன் பிறகு மிகவும் தைரியமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அபினை மற்றும் அமீர் இடையே நடந்த உறவு சிக்கல் மூலமாக பெரிதும் பேசப்பட்டார் .

இவ்வாறு பிக்பாஸ் வீட்டில் பாவனிக்கு எதிராக என்ன நடந்தாலும் பாவனியின் ஆர்மி மட்டும் அவருக்குத் தொடர்ந்து தங்களது ஆதரவையும், இணையத்தில் தங்களது ஆறுதலை தெரிவிப்பது மட்டுமல்லாமல் எக்கச்சக்கமான ஓட்டுக்களை ஒவ்வொரு வாரமும் தட்டி விடுகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News