தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்கும் 4 இயக்குனர்கள்.. லோகேஷை தூக்கி விட்ட ஒரே ஹீரோ

தமிழ் சினிமாவை தற்சமயம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் 4 இளம் இயக்குனர்களை பிரபல நடிகர் ஒருவர் வாய்ப்பு கொடுத்து வளர்த்து விட்டிருக்கிறார். அதிலும் தளபதியின் அஸ்தானை இயக்குனராக மாறிவிட்ட லோகேஷ் கனகராஜை, இந்த அளவிற்கு தூக்கிவிட்டதே பிரபல நடிகர் கொடுத்த வாய்ப்பு தான்.

பா. ரஞ்சித்: படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா. ரஞ்சித் அதன் பிறகு கார்த்திக் கதாநாயகனாக நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக அடையாளம் கண்டவர். அதன் பின் இவருக்கு ரஜினிகாந்தை வைத்து கபாலி என்னும் பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்து உலகளவில் இருக்கும் ரசிகர்களின் கவனம் பெற்றார். இதன் பின் முன்னணி நடிகர்களின் பல படங்களில் கமிட் ஆகி கொண்டிருக்கிறார் பா. ரஞ்சித். இவருடைய இந்த வளர்ச்சிக்கும் கார்த்தியின் மெட்ராஸ் படம் தான் காரணம்.

Also Read: கார்த்தி அடுத்தடுத்த எடுக்கப்போகும் மூன்று அவதாரங்களின் 2ம் பாகம்.. எதிர்பார்ப்பை கிளப்பிய சர்தார்-2

ஹெச் வினோத்: 2014 ஆம் ஆண்டு சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான இவரை வெற்றி இயக்குனராக மாற்றியது தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் தான். 2017 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான இந்தப் படம் பவாரியா நடவடிக்கை வழக்கிலிருந்து இந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

இது கொள்ளையர்களின் கொடூர நடவடிக்கையும் அவர்களை தமிழக அரசு எப்படி கூண்டோடு பிடித்தது என்பதை வெளிப்படுத்தி இருப்பார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற அடுத்தடுத்து இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றார். இதற்கெல்லாம் கார்த்தி தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்குவதற்காக கிடைத்த வாய்ப்பு தான் வினோத், தற்போது தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் முன்னணி இயக்குனராக மாறுவதற்கு காரணம்.

Also Read: கார்த்தியை ஹீரோவாக்க தயங்கிய மணிரத்னம்.. 18 வருடத்திற்கு முன்பே கைநழுவி போன வாய்ப்பு

லோகேஷ் கனகராஜ்: தற்சமயம் சினிமாவை ஆட்டிப்படைப்பவர் இளம் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கணகராஜ். இவர் மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, அதன் பின் தன்னுடைய 2-வது படமான கார்த்தியின் கைதி படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்தார். இந்தப் படத்தின் தொடர்ச்சியாக தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் மூலம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார்.

அதன் பிறகு உலக நாயகனின் விக்ரம் படத்தில் 500 கொடியை பாக்ஸ் ஆபிஸில் குவித்து மிரட்டினார். இதன்பின் இப்போது தளபதி 67 படத்தின் மூலம் மீண்டும் விஜயின் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இத்தகைய பெருமைக்குரிய லோகேஷ் கனகராஜுக்கு கைதி படம் தான் அவருடைய சினிமா கேரியரின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த வாய்ப்பை கார்த்தி தான் கொடுத்திருக்கிறார்.

பி எஸ் மித்ரன்: இரும்புத்திரை படத்தின் மூலம் அறிமுகமானபி எஸ் மித்ரன், அதன் பிறகு சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை இயக்கினார். இருப்பினும் கடந்த வருடம் இவருடைய இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ஸ்பை திரில்லர் படமான சர்தார் படம் தான் இவரை பிரமாண்ட இயக்குனராக நிலை நிறுத்தியது. இந்தப் படத்திற்குப் பிறகு பல டாப் ஹீரோக்களின் படங்களை இயக்குவதற்கான வாய்ப்பு பி எஸ் மித்ரனை தேடி வந்து கொண்டிருக்கிறது.

Also Read: முதல் நாள் படப்பிடிப்பில் மிரள விட்ட லோகேஷ்.. தளபதி 67 படக்குழுவை அண்ணாந்து பார்த்த விஜய்

இவ்வாறு இந்த 4 இயக்குனர்களும் தற்சமயம் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்து கொண்டிருப்பதாக சொல்லப்பட்டாலும், இந்த இயக்குனர்களுக்கு தன்னுடைய படத்தின் மூலம் வாய்ப்பு கொடுத்தது கார்த்தி தான் என்பது பலரையும் வியப்புடன் பார்க்க வைக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்