சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

டிஆர்பி-யில் டாப் 6 இடத்தை ஆக்கிரமித்த ஒரே சேனல்.. கயல், எதிர்நீச்சலை பின்னுக்குத் தள்ளிய சிங்கப்பெண்

Top 6 Serial TRP Ratings: ஒவ்வொரு வார இறுதி நாட்களில் அந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் இணையத்தில் வெளியாகி சின்னத்திரை ரசிகர்களின் கவனம் பெறும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 6 இடத்தை ஒரே சேனல் பெற்று கெத்து காட்டி இருக்கிறது.

சீரியல் என்றாலே அது சன் டிவி சீரியல் என்றாகிவிட்டது. அந்த அளவிற்கு திரைப்படங்களுக்கு நிகரான க்வாலிட்டியில் சீரியல்களை விறுவிறுப்பான கதைக்களத்துடன் ரசிகர்களுக்கு ஒளிபரப்புகின்றனர். ஆனால் சன் டிவியுடன் ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி தங்களால் முடிந்த அளவு போட்டி போகின்றனர்.

அந்த வகையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் 10-வது இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுக்கும், 9-வது இடம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலுக்கும், 8-வது இடம் ஆஹா கல்யாணம் சீரியலுக்கும், 7-வது இடத்தில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி சீரியலும் இருக்கிறது.

Also read: குடியும் குடித்தனமாய் குடும்பத்தை வழிநடத்தும் மூர்த்தி.. கண்மூடித்தனமாக அப்பா மீது பாசத்தை கொட்டும் மகன்கள்

டாப் 6 சீரியல் டிஆர்பி ரேட்டிங்:

6-வது இடத்தில் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியல் உள்ளது. 5-வது இடத்தில் மீண்டும் ரகடு பாயாக மாறி இனியாவை டார்ச்சர் செய்து கொண்டிருக்கும் விக்ரமின் ஆட்டத்தை காண்பிக்கும் இனியா சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. 4-வது இடம் கலெக்டராக மாறி மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் சுந்தரிக்கும் கிடைத்துள்ளது.

தங்கை துளசியின் வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கும் சின்ராசு அண்ணனின் பாச போராட்டத்தை காண்பிக்கும் வானத்தைப்போல சீரியலும், 4 மருமகள்கள் தங்களது சுயமரியாதைக்காக போராடும் எதிர்நீச்சல் சீரியலும் 3-வது இடத்தில் இருக்கிறது.

முதல் இடத்தில் எப்போதுமே இருக்கும் கயல் இந்த முறை 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இப்போதுதான் எழில் மீது கயலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக காதல் மலர்கிறது. விரைவில் இவர்களுடைய ரொமான்ஸ் காட்சியும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த சீரியலை அனுதினமும் தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். முதல் இடத்தில் சில்வண்டு போல் இருந்து கொண்டு அவ்வப்போது சிங்கமாக சீறிக் கொண்டிருக்கும் சிங்கபெண் ஆனந்தியின் சிங்கப் பெண்ணே சீரியல் இந்த வாரம் டிஆர்பி-யில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

Also read: அப்பத்தா இறந்ததால் எதிர்நீச்சல் போட போகும் மருமகள்கள்.. சீக்ரட்டாக காய் நகர்த்தும் ஜீவானந்தம்

- Advertisement -

Trending News