21 வயதுக்கு அப்புறம் 70 வயதில் நடிக்க வந்த நடிகர்.. 50 வருட இடைவெளிக்கு முற்றுப்புள்ளி வைத்த பாலுமகேந்திரா

சினிமாவை பொருத்தவரை தனது இளமை காலத்திலேயே அதிக படங்களை நடித்து தங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொள்ள வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். ஆனால் ஒருவர் தன்னுடைய 21 வயதில் படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு கிட்டத்தட்ட 50 வருடங்கள் கழித்து தன்னுடைய 70 ஆவது வயதில் அடுத்த படத்தில் நடித்தார். இந்த அளவுக்கு எந்த ஒரு நடிகரும் இடைவெளி எடுத்துக் கொண்டதில்லை. சம்பூர்ண மகாபாரதம் என்பது இவர் நடித்த முதல் படம்.

இப்படத்தை தொடர்ந்த இரண்டு, மூன்று படங்கள் நடித்தார். ஆனால் எந்த படமும் இவருக்கு சரியாக போகவில்லை. இதனால் தனக்கு சினிமாவே வேண்டாம் என திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு பல வருடங்கள் கழித்து பாலுமகேந்திரா தான் இவரை மீண்டும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான வீடு படத்தில் இவர் நடித்திருந்தார். அவர் பெயர் சொக்கலிங்க பாகவதர். இப்படத்தில் கதாநாயகியின் தாத்தா முருகேசன் ஆக சொக்கலிங்க பாகவதர் நடித்து இருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்தார். கமலஹாசனின் சதிலீலாவதி படத்தில் ரமேஷ் அரவிந்தின் தந்தையாக இவர் நடித்திருப்பார். இப்படத்தில் அவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதன்பிறகு ஜென்டில்மேன், இந்தியன் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

இவர் நடித்த வீடு மற்றும் சந்தியா ராகம் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். அதன்பிறகு சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். இவருக்கு 90வது வயதில் தமிழக அரசு கலைமாமணி விருதும், குடியிருக்க வீடும் வழங்கி கவுரவித்தது.

 

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்