Tamil Cinema News | சினிமா செய்திகள்
மோலிவுட்டின் பாக்ஸ் ஆபீசை மிரட்டிய ஒரே தமிழ் நடிகரின் படம்.! ஆல் ஏரியா தளபதி கில்லிதான்!
கோலிவுட், டோலிவுட், மோலிவுட், பாலிவுட் என அனைத்து மொழித்துறைகளிலும் முன்னணி ஹீரோவாக வலம் வருவதற்கு ஒரே தகுதியாக இருப்பது பாக்ஸ் ஆபீசை நிறைப்பதுதான்.
மேலும் இதை வைத்து தான் யார் ரசிகர்களின் மனதில் அதிக இடத்தை பிடித்து முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதை கணிக்கின்றனர் ரசிகர்கள்.
அந்த வகையில் கேரளாவில் வெளியான திரைப்படங்களில் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபீசை நிறைத்துள்ள ஐந்து படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அந்த லிஸ்டில் ஒரே ஒரு தமிழ் நடிகரின் படம் மட்டும் இடம் பெற்றிருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
மோலிவுட்டில் பாக்ஸ் ஆபீசை நிறைத்த படங்களின் லிஸ்ட் இதோ:
- ஒடியன்- ரூபாய் 7.25 கோடி
- லூசிஃபர் – ரூபாய் 6.37 கோடி
- சர்கார் – ரூபாய் 6.1 கோடி
- பாகுபலி 2 – ரூபாய் 5.45 கோடி
- காயங்குளம் கொச்சிணி – ரூ5.2 கோடி
ஏற்கனவே, தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்றால் தளபதி விஜய் தான் என்பது நாம் அறிந்ததே. ஏனெனில் விஜய் நடித்து வெளியான “சர்கார்” படம் முதல் நாளிலேயே ரூபாய் 31 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் தற்போது கேரளாவிலும் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் பாக்ஸ் ஆபீசை குவித்து சாதனை படைத்ததுள்ளது.

sarkar-movie
