பாகுபலி-2 படம் வெளியானபோது அதை பார்த்துவிட்டு அந்த படத்தை 100 முறை பார்க்கலாம் என கூறியவர் சமுத்திரக்கனி. அவர் தற்போது திரைப்படங்களை தரக்குறைவாக விமர்சிக்கும் விமர்சகர்களுக்கு ஒரு சவால் விடுத்துள்ளார்.

“எனக்கு வெற்றி பெற்றவர்களையும், இரண்டாம் இடம் பெறுபவர்களையும் பிடிக்கும். ஆனால் மைதானத்துக்கு வெளியே நின்று கொண்டு கருத்து மட்டும் கூறுபவர்களைப் பிடிக்காது. சவால் விடுகிறேன் விமர்சகர்களால் ‘பாகுபலி 2’-ல் ஒரு காட்சியைக் கூட எடுக்க முடியாது” என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது “ஆக்கபூர்வமானதாக இருக்கும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் தனிப்பட்ட முறையில் எதிர்மறை கருத்துகளையும் கூறும் விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.”